‘கல்விபுகட்டுகிறது, தகவலளிக்கிறது’
‘கல்விபுகட்டுகிறது, தகவலளிக்கிறது’
இப்படித்தான் விழித்தெழு! பத்திரிகையை பாப்புவா நியூ கினியின் மேட்டுநிலப் பகுதியைச் சேர்ந்த 26 வயதான ஒருவர் விவரிக்கிறார்.
கிளை அலுவலகத்திற்கு எழுதிய கடிதத்தில் அவர் இவ்வாறு கூறினார்: “உங்களுடைய பிரபல விழித்தெழு! பத்திரிகையில் பிரமாதமான, உண்மையான, கல்விபுகட்டுகிற, தகவலளிக்கிற கட்டுரைகளை பிரசுரிப்பதற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.” அவர் இவ்வாறு விளக்கினார்: “நான் யெகோவாவின் சாட்சியாக இல்லாதபோதிலும், என்னுடைய நண்பர்களிடமிருந்து விழித்தெழு! பத்திரிகையை வாங்கி வாசிப்பதை மிகவும் அனுபவித்து மகிழ்கிறேன். . . . ஓர் இதழை வாசிக்கும் ஒவ்வொரு முறையும், உங்களுடைய பயனுள்ள முயற்சியை பாராட்டி கடிதம் எழுத துடிக்கிறேன். ஆனால் நான் எழுதுவதற்குள் அடுத்த பத்திரிகை வந்துவிடுவதால் மறுபடியும் அதை வாசிப்பதில் மூழ்கிவிடுகிறேன்.”
மனமார பாராட்டும் இந்த வாசகர் முடிவாக இவ்வாறு எழுதினார்: “என்னைப் பொருத்தவரை, வாசிக்க தெரிந்த எவருக்கும் விழித்தெழு! பத்திரிகை உண்மையிலேயே மதிப்புமிக்கது. உங்களுக்கு என்னுடைய இதயப்பூர்வமான நன்றிகள் பல.”
விழித்தெழு! பத்திரிகை பல விஷயங்களில் அறிவொளியூட்டுகிறது. மிக முக்கியமாக, தற்போதைய பொல்லாத உலக சமுதாயம் அழிக்கப்பட்டு, சமாதானம் தவழும் புதிய உலக சமுதாயம் ஸ்தாபிக்கப்படும் என்ற படைப்பாளருடைய வாக்குறுதியில் நம்பிக்கையை வளர்க்கிறது.
கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற 32 பக்க சிற்றேடு கடவுளுடைய நோக்கத்தை சிறப்பித்துக் காட்டுகிறது, அவருடைய அங்கீகாரத்தைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள பைபிளிலிருந்து தகவல் தருகிறது. கீழ்க்காணும் கூப்பனை பூர்த்திசெய்து அதிலுள்ள விலாசத்திற்கோ அல்லது இந்தப் பத்திரிகையில் 5-ம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசத்திற்கோ அனுப்பி இந்தச் சிற்றேட்டைப் பற்றிய கூடுதலான தகவலை பெற்றுக்கொள்ளலாம்.(g01 5/8)
□ கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டைப் பற்றிய கூடுதலான தகவலை எனக்கு அனுப்புங்கள்.
□ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.