“பூமியில் ஓவர்லோடு” பரிகாரமுண்டா?
“பூமியில் ஓவர்லோடு”—பரிகாரமுண்டா?
பூமியின் ஜனத்தொகை 1960-ல் 300 கோடியை எட்டியது. 2000-க்குள் அந்த எண்ணிக்கை இரண்டு மடங்காகிவிட்டது. “ஒவ்வொரு விநாடிக்கும் ஐந்து குழந்தைகள் பிறப்பதால் ஜனத்தொகை பெருத்துக்கொண்டே போகிறது” என சொல்கிறது வான்கூவர் சன் செய்தித்தாள். ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் 23 மெகா-சிட்டிகள் இப்போது இந்த உலகில் இருக்கின்றன. 2025-க்குள் உலக ஜனத்தொகை ஆயிரம் கோடியை அடைந்துவிடும்!
ஏற்கெனவே உருக்குலைந்து போகும் நிலையிலுள்ள பூமியின் சூழியல் அமைப்பில் இப்படிப்பட்ட அதிகரிப்பு ஏற்படுத்தும் பாதிப்பைக் குறித்து விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த உலகில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு புதிய குடிமகனுக்கும் உணவு, உறைவிடம், தண்ணீர் தேவை; மேலும் ஜனத்தொகை விண்ணை முட்டும் வேகத்தில் செல்கையில் நுகரும் பொருட்களின் அளவும் அதிகரித்துக்கொண்டே போகிறது. மலைபோல் குவியும் கழிவுப் பொருட்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். தறிகெட்ட வேகத்தில் விரிவடைந்துகொண்டே போகும் ‘சூப்பர்சிட்டி’களை சமாளிப்பதே இப்போது சவாலாக இருக்கிறது. இந்த சூப்பர்சிட்டிகள் ‘புறநகர் பகுதிகளிலுள்ள வளங்களை பெருமளவில் உறிஞ்சிக்கொண்டு, நச்சு கழிவுப் பொருட்களை பெருமளவில் வெளியேற்றுகின்றன’ என அந்த சன் செய்தித்தாள் சொல்கிறது.
“பூமியில் ஓவர்லோடு” என அழைக்கப்படும் இந்தப் பிரச்சினைக்கு பரிகாரமுண்டா? மனித விவகாரங்களில் கடவுள் தலையிடுவார் என பைபிள் வாக்குறுதி அளிப்பது மனமகிழ்ச்சி தருகிறது. இதை அவர் எப்படி செய்வார் என்பதையும் விளைவு எப்படியிருக்கும் என்பதையும் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தின் வாயிலாக கற்றுக்கொள்ளுங்கள். இங்கே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கோ அல்லது இந்தப் பத்திரிகையில் பக்கம் 5-ல் பட்டியலிடப்பட்டுள்ள முகவரிக்கோ இந்தக் கூப்பனை பூர்த்திசெய்து அனுப்பி கூடுதலான தகவலை பெற்றுக்கொள்ளும்படி உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.(g01 4/22)
□ நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தைப் பற்றி கூடுதலான தகவலை எனக்கு அனுப்புங்கள்.
□ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.