“கடவுளின் ஆச்சரியமான செயல்களை ஏன் கூர்ந்து கவனிக்க வேண்டும்”
சொற்பொழிவை கேட்க வாரீர்!
“கடவுளின் ஆச்சரியமான செயல்களை ஏன் கூர்ந்து கவனிக்க வேண்டும்”
“கடவுளின் வார்த்தையின்படி நடப்போர்” என்ற மூன்று நாள் மாநாடு இந்த மாதம் முதற்கொண்டு ஐக்கிய மாகாணங்களில் 181 இடங்களில் நடைபெறும். மேற்கண்ட தலைப்பில் கொடுக்கப்படும் பேச்சே அந்த மாநாட்டின் சிறப்புப் பேச்சாகும். இவற்றில் 38 மாநாடுகள் ஸ்பானிய மொழியிலும், 17 மாநாடுகள் ஆங்கிலம் தவிர மற்ற 12 மொழிகளிலும் நடைபெறும். உலகம் முழுவதும் 150-க்கும் அதிக நாடுகளில் 2,000-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறும் இந்த மாநாடுகளில் மேற்குறிப்பிடப்பட்ட தலைப்புப்பொருள் சிறப்பித்துக் காண்பிக்கப்படும்.
20-ம் நூற்றாண்டில் மலைக்க வைக்கும் எத்தனையோ காரியங்களை மனிதர் சாதித்துவிட்டார்கள், 21-ம் நூற்றாண்டிலும் அதற்கும் அதிகமாக சாதனை படைப்பார்கள் என்பதில் ஆச்சரியமில்லை. ஆனால், மனிதனின் செயல்களை கடவுளுடைய சாதனைகளோடு ஒப்பிட அவை அற்பமானவை! பூர்வகாலத்து ஞானி ஒருவர் இவ்வாறு கூறியதில் வியப்பேதுமில்லை: “தரித்துநின்று தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளைத் தியானித்துப் பாரும்.”—யோபு 37:14.
கடல் ஓதங்கள், மழை, பனி, காற்று போன்ற இயற்கை படைப்புகள் நமக்கு சொல்லித்தரும் பாடம் என்ன? இவற்றின் படைப்பாளரைப் பற்றி அறியும்போது நம் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றம் என்ன? இந்தக் கேள்விகள் மட்டுமல்ல, வேறு பல கேள்விகளுக்கும் அந்தப் பொதுப் பேச்சில் பதிலளிக்கப்படும்.
உங்கள் வீட்டிற்கு அருகே மாநாடு நடக்கும் இடத்தை அறிய உள்ளூரிலுள்ள யெகோவாவின் சாட்சிகளிடம் தொடர்பு கொள்ளுங்கள். அல்லது இப்பத்திரிகையை பிரசுரிப்போருக்கு எழுதுங்கள்.