படிப்புக் கட்டுரை 10
யெகோவாமீது இருக்கிற அன்பு ஞானஸ்நானம் எடுக்க உங்களைத் தூண்டும்!
“ஞானஸ்நானம் எடுக்க இனி எனக்கு என்ன தடை?”—அப். 8:36.
பாட்டு 66 யெகோவாவுக்கு முழு பக்தி காட்டுவேன்
இந்தக் கட்டுரையில்... *
1-2. அப்போஸ்தலர் 8:27-31, 35, 36, 38 சொல்வதுபோல், எத்தியோப்பிய அதிகாரி ஏன் ஞானஸ்நானம் எடுத்தார்?
நீங்கள் ஞானஸ்நானம் எடுக்க ஆசைப்படுகிறீர்களா? அன்பும் நன்றியுணர்வும் இருந்ததால் நிறைய பேர் அப்படி ஞானஸ்நானம் எடுத்திருக்கிறார்கள். அதில் ஒருவர்தான் எத்தியோப்பிய ராணியிடம் வேலை செய்த ஓர் அதிகாரி! அவரைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
2 வேதவசனங்களிலிருந்து அவர் என்ன கற்றுக்கொண்டாரோ அதை உடனடியாகச் செய்தார். (அப்போஸ்தலர் 8:27-31, 35, 36, 38-ஐ வாசியுங்கள்.) ரதத்தில் போய்க்கொண்டிருந்தபோது அவர் படித்துக்கொண்டிருந்த ஏசாயா சுருளின் ஒரு பகுதியை, அதாவது கடவுளுடைய வார்த்தையை, உயர்வாக மதித்ததால்தான் அவர் அப்படிச் செய்தார். பிலிப்பு தன்னிடம் பேசியபோது, தனக்காக இயேசு என்ன செய்திருக்கிறார் என்பதை அவர் புரிந்துகொண்டார். அப்போது, அவருடைய மனதில் நன்றி பொங்கியது. ஆனால், அவர் ஏன் எருசலேமுக்குப் போனார்? ஏனென்றால், அவர் ஏற்கெனவே யெகோவாவின் மீது அன்பை வளர்த்திருந்தார். இது நமக்கு எப்படித் தெரியும்? எருசலேமில் யெகோவாவை வணங்கிவிட்டுதான் அவர் திரும்பி வந்துகொண்டிருந்தார்! தன்னுடைய மதத்தை விட்டுவிட்டு உண்மைக் கடவுளுக்கென்று தங்களை அர்ப்பணித்த மக்களோடு சேர்ந்து யெகோவாவை வணங்க ஆரம்பித்திருந்தார். யெகோவாவின் மீது இருந்த அதே அன்புதான், இன்னொரு முக்கியமான படியை எடுக்க அவரைத் தூண்டியது. அதாவது, ஞானஸ்நானம் எடுத்து கிறிஸ்துவின் சீஷராக ஆக வேண்டும் என்ற ஆசையைத் தூண்டியது.—மத். 28:19.
3. ஞானஸ்நானம் எடுப்பதற்கு எது தடையாக இருக்கலாம்? (“ உங்கள் இதயமெனும் நிலம் எப்படிப்பட்டது?” என்ற பெட்டியைப் பாருங்கள்.)
3 யெகோவாவின் மீது அன்பு இருந்தால் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு வரும். ஆனால், மற்றவர்களின் மேலும் மற்ற விஷயங்களின் மேலும் அதிகமான அன்பு இருந்தால், ஞானஸ்நானம் எடுப்பதற்கு அது தடையாகிவிடலாம். எப்படி? சில விஷயங்களை யோசித்துப்பாருங்கள். யெகோவாவை வணங்காத குடும்பத்தாரின் மேலும் நண்பர்களின் மேலும் நீங்கள் ஆழமான அன்பு வைத்திருக்கலாம். ஞானஸ்நானம் மத். 10:37) அல்லது, கடவுள் வெறுக்கிற பழக்கவழக்கங்களை நீங்கள் நேசிக்கலாம். அவற்றின் பிடியிலிருந்து வெளியே வருவது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். (சங். 97:10) அல்லது, பொய் மதத்தோடு சம்பந்தப்பட்ட சில பண்டிகைகளைச் சின்ன வயதிலிருந்தே நீங்கள் கொண்டாடிவந்திருக்கலாம். அதனோடு சம்பந்தப்பட்ட சம்பிரதாயங்களையும் நீங்கள் செய்துவந்திருக்கலாம். அந்த நினைவுகள் எல்லாம் உங்கள் நெஞ்சைவிட்டு நீங்காமல் இருக்கலாம். அவற்றை விட்டுவிடுவது உங்களுக்குச் சிரமமாக இருக்கலாம். (1 கொ. 10:20, 21) அதனால், “எது மேல இல்லனா யார் மேல நான் அதிகமாக அன்பு காட்டணும்?” என்று இப்போது நீங்கள் முடிவெடுக்க வேண்டும்.
எடுத்துவிட்டால் அவர்கள் உங்களை வெறுத்துவிடுவார்களோ என்று நினைத்து நீங்கள் கவலைப்படலாம். (யார்மீது ஆழமான அன்பை வளர்த்துக்கொள்ள வேண்டும்?
4. ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்ற ஆசை எப்போது வரும்?
4 யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து பைபிளைப் படிப்பதற்கு முன்பாகவே நீங்கள் பைபிளை உயர்வாக மதித்திருக்கலாம். இயேசுவின் மீதும் அன்பை வளர்த்திருக்கலாம். யெகோவாவின் சாட்சிகளோடு பழகியதற்குப் பிறகு, அவர்களோடு நேரம் செலவிடுவது உங்களுக்கு ரொம்பப் பிடித்திருக்கலாம். இப்படி, நிறைய விஷயங்களை நீங்கள் நேசிக்கலாம்; உயர்வாகவும் நினைக்கலாம். ஆனால், யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணிப்பதற்கும் ஞானஸ்நானம் எடுப்பதற்கும் இவை மட்டுமே போதாது. யெகோவாவின் மீது அன்பை வளர்த்துக்கொண்டால்தான் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்ற ஆசை வரும். எல்லாவற்றையும்விட யெகோவாவை நீங்கள் அதிகமாக நேசித்தால், அவருக்குச் சேவை செய்வதிலிருந்து வேறு யாரும் வேறு எதுவும் உங்களைத் தடுத்து நிறுத்த முடியாது. யெகோவாமீது இருக்கும் அன்புதான், ஞானஸ்நானம் என்ற படியை எடுப்பதற்கான வழி! நாம் வழிவிலகிப் போகாதபடி நம்மைப் பாதுகாக்கிற வேலி!
5. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றித் தெரிந்துகொள்வோம்?
5 யெகோவாமேல் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் முழு பலத்தோடும் அன்பு காட்ட வேண்டும் என்று இயேசு சொன்னார். (மாற். 12:30) இந்தளவுக்கு யெகோவாமேல் அன்பும் மரியாதையும் காட்டுவதற்கு எப்படிக் கற்றுக்கொள்ளலாம்? யெகோவா நம்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்று யோசித்துப்பார்க்கும்போது, அவர்மேல் அன்பு காட்ட வேண்டும் என்ற தூண்டுதல் வரும். (1 யோ. 4:19) இப்படி அன்பை வளர்த்துக்கொள்வதற்கும், ஞானஸ்நானம் எடுப்பதற்கும் நீங்கள் என்னென்ன விஷயங்களைச் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
6. ரோமர் 1:20-ன்படி, யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கான ஒரு வழி என்ன?
6 படைப்புகளைப் பார்த்து யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொள்ளுங்கள். (ரோமர் 1:20-ஐ வாசியுங்கள்; வெளி. 4:11) உங்களைச் சுற்றியிருக்கும் விதவிதமான செடி கொடிகளையும் மிருகங்களையும் பாருங்கள். அவற்றில் பொதிந்திருக்கும் யெகோவாவின் ஞானத்தை யோசித்துப்பாருங்கள். உங்கள் உடலைப் பற்றிக் கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள். அதை எவ்வளவு அற்புதமாக யெகோவா படைத்திருக்கிறார்! (சங். 139:14) சூரியனைக் கொஞ்சம் அண்ணாந்து பாருங்கள். அதற்குள் எவ்வளவு ஆற்றலை அவர் அடைத்துவைத்திருக்கிறார்! இத்தனைக்கும், கோடிக்கணக்கான நட்சத்திரங்களில் இது வெறும் ஒரு நட்சத்திரம்தான்! * (ஏசா. 40:26) இப்படியெல்லாம் யோசித்துப்பார்க்கும்போது, யெகோவாமீது இருக்கும் மரியாதை அதிகமாகும். ஆனால் அவரோடு நெருக்கமான பந்தம் வைத்துக்கொள்வதற்கு, அவருடைய ஞானத்தைப் பற்றியும் வல்லமையைப் பற்றியும் தெரிந்துகொண்டால் மட்டுமே போதாது. அவரைப் பற்றி இன்னும் நிறைய தெரிந்துகொள்ள வேண்டும்.
7. யெகோவாமீது இருக்கும் அன்பு அதிகமாவதற்கு எந்த விஷயத்தை நீங்கள் உறுதியாக நம்ப வேண்டும்?
7 யெகோவாவுக்கு உங்கள்மீது அன்பு இருக்கிறது என்பதை நீங்கள் உறுதியாக நம்ப வேண்டும். வானத்தையும் பூமியையும் படைத்தவர் உங்களைப் பார்க்கிறார்... உங்கள்மேல் அக்கறை வைத்திருக்கிறார்... என்று நம்புவது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறதா? அப்படியென்றால், யெகோவா ‘நம் ஒருவருக்கும் தூரமானவராக இல்லை’ என்பதை மறந்துவிடக் கூடாது. (அப். 17:26-28) அவர் “எல்லாருடைய இதயத்தையும் ஆராய்ந்து பார்க்கிறார்.” தாவீது சாலொமோனிடம் சொன்னதுபோல், ‘நீங்கள் அவரைத் தேடினால், அவரைக் கண்டடைய உதவுவதாக’ யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். (1 நா. 28:9) சொல்லப்போனால், நீங்கள் பைபிளைப் படிப்பதற்குக் காரணமே அவர் ‘உங்களை தன் பக்கம் இழுத்திருப்பதுதான்!’ (எரே. 31:3) யெகோவா உங்களுக்காகச் செய்திருக்கும் எல்லாவற்றையும் நீங்கள் புரிந்துகொள்ளும்போது, அவர்மீது இருக்கும் அன்பு இன்னும் அதிகமாகும்.
8. நீங்கள் எப்படி யெகோவாவின் மேல் அன்பு காட்டலாம்?
8 நீங்கள் யெகோவாவின் மேல் அன்பு காட்டுவதற்கான ஒரு வழி, அவரிடம் பேசுவது! உங்கள் கவலைகளையும், உங்களுக்காக அவர் செய்த எல்லாவற்றுக்கான நன்றிகளையும் சொல்லும்போது, அவர்மேல் இருக்கும் அன்பு அதிகமாகும். உங்கள் ஜெபத்துக்கு அவர் பதில் கொடுப்பதைப் பார்க்கும்போது, உங்களுக்கும் அவருக்கும் இடையில் இருக்கும் பாசப் பிணைப்பு பலமாகும். (சங். 116:1) அவர் உங்களைப் புரிந்துகொள்கிறார் என்ற நம்பிக்கையும் பிறக்கும். ஆனால், யெகோவாவிடம் இன்னும் நெருங்கிப் போக வேண்டும் என்றால், அவர் எப்படி யோசிக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இதையெல்லாம் செய்வதற்கு ஒரே வழி, அவருடைய வார்த்தையைப் படிப்பதுதான்!
9. பைபிளை மதிக்கிறீர்கள் என்பதை நீங்கள் எப்படிக் காட்டலாம்?
9 பைபிளின் மீது மதிப்பை வளர்த்துக்கொள்ளுங்கள். யெகோவாவைப் பற்றிய உண்மைகளும், உங்களுக்கு அவர் என்ன நோக்கம் வைத்திருக்கிறார் என்ற விவரங்களும் பைபிளில் மட்டும்தான் இருக்கின்றன. தினமும் பைபிளைப் படிப்பதன் மூலம்... பைபிள் படிப்புக்காகத் தயாரிப்பதன் மூலம்... படித்த விஷயங்களின்படி வாழ்வதன் மூலம்... பைபிளை மதிக்கிறீர்கள் என்பதைக் காட்டலாம். (சங். 119:97, 99; யோவா. 17:17) தினமும் பைபிளைப் படிப்பதற்காக அட்டவணை போட்டிருக்கிறீர்களா? அட்டவணையின்படி செய்கிறீர்களா?
10. பைபிளின் ஒரு சிறப்பம்சம் என்ன?
10 இயேசுவை நேரில் பார்த்தவர்கள் பதிவு செய்த தகவல்கள் பைபிளில் இருக்கின்றன. இது, பைபிளின் சிறப்பம்சங்களில் ஒன்று! உங்களுக்காக இயேசு என்ன செய்திருக்கிறார் என்பதைத் துல்லியமாகச் சொல்கிற ஒரே புத்தகம் இதுதான். இயேசு சொன்னதையும் செய்ததையும் தெரிந்துகொள்ளும்போது, அவரோடு நட்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு வரும்.
11. யெகோவாமீது அன்பை வளர்த்துக்கொள்ள எது உதவும்?
11 இயேசுமீது அன்பை வளர்த்துக்கொள்ளுங்கள். அப்படிச் செய்தால், யெகோவாமீது அன்பு வளரும். எப்படி? தன்னுடைய அப்பாவின் குணங்களை இயேசு அப்படியே காட்டினார். (யோவா. 14:9) அதனால், நீங்கள் எந்தளவு இயேசுவைப் பற்றித் தெரிந்துகொள்கிறீர்களோ, அந்தளவு யெகோவாவைப் பற்றிப் புரிந்துகொள்ள முடியும். அவர்மேல் இருக்கிற மதிப்பும் அதிகமாகும். மற்றவர்களால் தாழ்வாகப் பார்க்கப்பட்ட ஏழைகள், நோயாளிகள், பலவீனமானவர்கள் ஆகியவர்களிடம் இயேசு எப்படிக் கரிசனை காட்டினார் என்று யோசித்துப்பாருங்கள். உங்கள் தினசரி வாழ்க்கைக்கு அவர் கொடுத்திருக்கிற அறிவுரைகளையும், அதன்படி செய்யும்போது உங்கள் வாழ்க்கை எப்படி வளம் பெறும் என்பதையும் யோசித்துப்பாருங்கள்.—மத். 5:1-11; 7:24-27.
12. இயேசுவைப் பற்றித் தெரிந்துகொள்ளும்போது, என்ன எண்ணம் உங்களுக்கு வரலாம்?
12 நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காக இயேசு செய்த தியாகத்தைப் பற்றி ஆழமாக யோசித்துப்பார்க்கும்போது, அவர்மீது இருக்கும் அன்பு இன்னும் அதிகமாகும். (மத். 20:28) உங்களுக்காக இயேசு தன்னுடைய உயிரை மனதாரக் கொடுத்தார் என்பதைப் புரிந்துகொள்ளும்போது, மனம் திருந்தி யெகோவாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு வரலாம். (அப். 3:19, 20; 1 யோ. 1:9) யெகோவாமீதும் இயேசுமீதும் அன்பு காட்டும்போது, உங்களைப் போலவே அவர்கள்மீது அன்பு காட்டுகிறவர்களோடு பழக வேண்டும் என்று விரும்புவீர்கள்.
13. யெகோவா உங்களுக்கு என்ன தந்திருக்கிறார்?
13 யெகோவாவை நேசிக்கிறவர்கள்மீது அன்பை வளர்த்துக்கொள்ளுங்கள். யெகோவாவின் சாட்சியாக ஆவதற்கு நீங்கள் ஏன் விரும்புகிறீர்கள் என்பதை, யெகோவாவை வணங்காத உங்கள் குடும்பத்தாரும் உங்கள் பழைய நண்பர்களும் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம். அவர்கள் உங்களை எதிர்க்கவும் செய்யலாம். ஆனால், யெகோவா உங்களுக்கு ஒரு குடும்பத்தைத் தருவார்; சபையில் இருக்கிற சகோதர சகோதரிகள்தான் அந்தக் குடும்பம்! இந்தக் குடும்பத்தாரோடு நெருக்கமான நட்பு வைத்துக்கொண்டால், உங்களுக்குத் தேவையான அன்பும் ஆதரவும் கிடைக்கும். (மாற். 10:29, 30; எபி. 10:24, 25) காலப்போக்கில், உங்கள் குடும்பத்தார் உங்களோடு சேர்ந்து யெகோவாவை வணங்குவதற்கும், அவருடைய நெறிமுறைகளின்படி வாழ்வதற்கும் வாய்ப்பிருக்கிறது.—1 பே. 2:12.
14. யெகோவாவின் நெறிமுறைகளைப் பற்றி 1 யோவான் 5:3-லிருந்து என்ன தெரிந்துகொண்டீர்கள்?
14 யெகோவாவின் நெறிமுறைகளின் மீது மதிப்பை வளர்த்துக்கொள்ளுங்கள், அவற்றின்படி நடப்பதற்குக் கற்றுக்கொள்ளுங்கள். யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பு, உங்களுக்கென்று சில நெறிமுறைகள் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது, யெகோவாவின் நெறிமுறைகள்தான் சிறந்தவை என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். (சங். 1:1-3; 1 யோவான் 5:3-ஐ வாசியுங்கள்.) உதாரணத்துக்கு, கணவர்களுக்கும் மனைவிகளுக்கும் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் பைபிள் தருகிற ஆலோசனைகளைக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். (எபே. 5:22–6:4) இந்த ஆலோசனைகளின்படி நடந்ததால், உங்கள் குடும்பத்தில் சந்தோஷம் அதிகமாகியிருக்கிறதா? நண்பர்களைத் தேர்ந்தெடுப்பது பற்றி யெகோவா சொன்ன அறிவுரைகளின்படி நடந்ததால், உங்களால் நல்ல பழக்கவழக்கங்களை வளர்த்துக்கொள்ள முடிந்திருக்கிறதா? முன்பைவிட இப்போது உங்கள் சந்தோஷம் அதிகமாயிருக்கிறதா? (நீதி. 13:20; 1 கொ. 15:33) இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பெரும்பாலும் “ஆமாம்” என்பதுதான் உங்கள் பதிலாக இருக்கும்!
15. பைபிள் நியமங்களின்படி வாழ்வது எப்படியென்று தெரியவில்லையென்றால் நீங்கள் என்ன செய்யலாம்?
15 பைபிள் நியமங்களின்படி வாழ்வது எப்படியென்று சிலசமயங்களில் உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். கவலைப்படாதீர்கள்! அதற்காகத்தான் யெகோவா தன்னுடைய அமைப்பின் மூலம் பிரசுரங்களைத் தந்திருக்கிறார். சரி எது தவறு எது என்பதை இவற்றிலிருந்து தெரிந்துகொள்ளலாம். (எபி. 5:13, 14) இவற்றைப் படிக்கும்போது, உங்களுக்குப் பிரயோஜனமான, திட்டவட்டமான தகவல்கள் இருப்பதைப் பார்க்க முடியும். அமைப்பில் ஒருவராக ஆக வேண்டும் என்ற ஆசையை இது உங்களுக்குக் கொடுக்கும்.
16. தன்னுடைய மக்களை யெகோவா எப்படி ஒழுங்கமைத்திருக்கிறார்?
16 யெகோவாவுடைய அமைப்பின் மீது அன்பை வளர்த்துக்கொள்ளுங்கள், அதை ஆதரிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். யெகோவா தன்னுடைய மக்களை சபைகளாக ஒழுங்கமைத்திருக்கிறார். அவருடைய மகன் இயேசுதான் எல்லா சபைகளுக்கும் தலைவர். (எபே. 1:22; 5:23) இயேசு இன்று செய்ய நினைக்கும் எல்லா வேலைகளையும் ஒழுங்கமைப்பதற்கு, பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் அடங்கிய ஒரு சிறிய தொகுதியை நியமித்திருக்கிறார். அந்தத் தொகுதியை, “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” என்று அவர் சொன்னார். யெகோவாவிடம் நீங்கள் நெருங்கி வரவும், அவரோடு இருக்கிற பந்தத்தைக் காத்துக்கொள்ளவும் உங்களுக்கு உதவுகிற பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. இதை அவர்கள் மிக முக்கியமானதாக நினைக்கிறார்கள். (மத். 24:45-47) அவர்கள் நம்மை நிறைய வழிகளில் கவனித்துக்கொள்கிறார்கள். உங்களை வழிநடத்தவும் பாதுகாக்கவும் தகுதியுள்ள ஆண்களை மூப்பர்களாக நியமிப்பது, அதில் ஒரு வழி! (ஏசா. 32:1, 2; எபி. 13:17; 1 பே. 5:2, 3) உங்களுக்குத் தேவையான ஆறுதலைத் தரவும், இதுவரை இல்லாதளவுக்கு நீங்கள் யெகோவாவிடம் நெருங்கி வரவும், தங்களால் முடிந்த எல்லாவற்றையும் மூப்பர்கள் செய்கிறார்கள். அவர்கள் செய்கிற மிக முக்கியமான உதவிகளில் ஒன்று, யெகோவாவைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்லித் தர உங்களுக்கு உதவுவது!—எபே. 4:11-13.
17. ரோமர் 10:10, 13, 14-ன்படி, யெகோவாவைப் பற்றி மற்றவர்களிடம் ஏன் பேச வேண்டும்?
மத். 28:19, 20) ஆனால், ஒரு விஷயத்தை நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது, கடமைக்காக இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிவதற்கும் வாய்ப்பிருக்கிறது; யெகோவாமீது இருக்கிற அன்பால் கீழ்ப்படிவதற்கும் வாய்ப்பிருக்கிறது. யெகோவாமீது இருக்கிற அன்பு அதிகமாகும்போது, “நாங்கள் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் பற்றிப் பேசுவதை எங்களால் நிறுத்த முடியாது” என்று சொன்ன அப்போஸ்தலன் பேதுரு மற்றும் யோவானைப் போல் நீங்களும் உணருவீர்கள். (அப். 4:20) யெகோவாமீது அன்பு வைக்க மற்றவர்களுக்கு உதவுவதைத் தவிர, வேறு எதுவும் உங்களுக்கு அதிக சந்தோஷத்தைத் தராது! நற்செய்தியாளரான பிலிப்புவைப் பற்றி யோசித்துப்பாருங்கள். வேதவசனங்களில் இருக்கிற உண்மைகளைத் தெரிந்துகொள்ளவும், ஞானஸ்நானம் எடுக்கவும் எத்தியோப்பிய அதிகாரிக்கு உதவியபோது, பிலிப்புவுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்! பிரசங்கிக்கும்படி இயேசு சொன்ன கட்டளைக்கு பிலிப்பு போலவே நீங்களும் கீழ்ப்படியும்போது, யெகோவாவின் சாட்சியாக ஆவதற்கு நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதைக் காட்டுகிறீர்கள். (ரோமர் 10:10, 13, 14-ஐ வாசியுங்கள்.) அப்போது, “ஞானஸ்நானம் எடுக்க இனி எனக்கு என்ன தடை?” என்று கேட்ட எத்தியோப்பிய அதிகாரியைப் போலவே நீங்களும் கேட்பதற்கு வாய்ப்பிருக்கிறது.—அப். 8:36.
17 யெகோவாமீது அன்பை வளர்த்துக்கொள்ள மற்றவர்களுக்கு உதவுங்கள். யெகோவாவைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்லித்தரும்படி இயேசு தன் சீஷர்களிடம் சொன்னார். (18. அடுத்த கட்டுரையில் என்ன பார்க்கப்போகிறோம்?
18 ஞானஸ்நானம் எடுப்பதற்கு நீங்கள் முடிவு செய்யும்போது, உங்கள் வாழ்க்கையிலேயே மிக முக்கியமான ஒரு படியை எடுக்கிறீர்கள் என்று அர்த்தம்! அதனால், ஞானஸ்நானம் எடுப்பதில் என்னென்ன விஷயங்கள் அடங்கியிருக்கின்றன என்பதைப் பற்றிக் கவனமாக யோசித்துப்பாருங்கள். அப்படியென்றால், ஞானஸ்நானத்தைப் பற்றி நீங்கள் என்ன தெரிந்துகொள்ள வேண்டும்? ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பும் பின்பும் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள், அடுத்த கட்டுரையில்!
பாட்டு 138 யெகோவா என்பதே உங்கள் பெயர்
^ பாரா. 5 ‘ஞானஸ்நானம் எடுத்து, ஒரு யெகோவாவின் சாட்சியா ஆகுறதுக்கு நான் தயாரா இருக்கிறேனா?’ என்று யெகோவாவை நேசிக்கிற சிலர் யோசிக்கலாம். நீங்களும் அப்படித்தான் யோசிக்கிறீர்களா? அப்படியென்றால், ஞானஸ்நானம் எடுப்பதற்கு உங்களுக்கு உதவுகிற சில குறிப்புகளை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
^ பாரா. 6 இன்னும் நிறைய தெரிந்துகொள்வதற்கு, உயிர் படைக்கப்பட்டதா? (ஆங்கிலம்) என்ற சிற்றேட்டையும், உயிரின் தோற்றம்—சிந்திக்க ஐந்து கேள்விகள் என்ற சிற்றேட்டையும் பாருங்கள்.
^ பாரா. 60 பட விளக்கம்: ஒரு சகோதரி சந்தைக்குப் போயிருக்கிறார். அப்போது, கடையில் இருக்கிற இளம் பெண்ணிடம் துண்டுப் பிரதியைக் கொடுக்கிறார்.