காவற்கோபுரம் (படிப்பு இதழ்) மே 2020
ஜூலை 6—ஆகஸ்ட் 2, 2020-க்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.
முடிவு காலத்தில் எது ‘வடதிசை ராஜாவாக’ ஆகும்?
படிப்புக் கட்டுரை 19: ஜூலை 6-12, 2020. வடதிசை ராஜாவைப் பற்றியும் தென்திசை ராஜாவைப் பற்றியும் தானியேலில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் நிறைவேறி வருவதற்கான ஆதாரத்தை நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால், அந்த ஆதாரங்களை நம்மால் நம்ப முடியுமா? இந்தத் தீர்க்கதரிசனத்தின் எல்லா விவரங்களையும் புரிந்துகொள்வது ஏன் முக்கியம்?
கடைசி நாட்களில் எதிரும் புதிருமான இரண்டு ராஜாக்கள்
வடதிசை ராஜா மற்றும் தென்திசை ராஜாவைப் பற்றிய தீர்க்கதரிசனங்களும் மற்ற தீர்க்கதரிசனங்களும் ஒரே காலகட்டத்தில் நடக்கின்றன. இந்த உலகத்துக்கு சீக்கிரத்தில் முடிவு வரப்போகிறது என்பதை இந்தத் தீர்க்கதரிசனங்கள் எப்படிக் காட்டுகின்றன?
இன்று ‘வடதிசை ராஜா’ யார்?
படிப்புக் கட்டுரை 20: ஜூலை 13-19, 2020. இன்று “வடதிசை ராஜா யார்”? அவனுக்கு எப்படி முடிவு வரும்? இதற்கான பதில்களைத் தெரிந்துகொள்ளும்போது, நம்முடைய விசுவாசம் பலமாகும். அதோடு, எதிர்காலத்தில் வரப்போகிற சோதனைத் தீயைத் தாக்குப்பிடிக்கவும் நம்மால் தயாராக இருக்க முடியும்.
கடவுள் தந்த பரிசுகளுக்கு நன்றியோடு இருக்கிறீர்களா?
படிப்புக் கட்டுரை 21: ஜூலை 20-26, 2020. யெகோவாவுக்கும், அவர் தந்திருக்கிற சில பரிசுகளுக்கும் நன்றியோடு இருப்பதற்கு இந்தக் கட்டுரை உதவும். கடவுள் இருக்கிறாரா என்று சந்தேகப்படுகிறவர்களிடம் காரணங்காட்டிப் பேசவும் உதவும்.
பார்க்க முடியாத பொக்கிஷங்களுக்கு நன்றி காட்டுங்கள்!
படிப்புக் கட்டுரை 22: ஜூலை 27–ஆகஸ்ட் 2, 2020. பார்க்க முடிந்த பொக்கிஷங்களைப் பற்றி முந்தின கட்டுரையில் பார்த்தோம். பார்க்க முடியாத பொக்கிஷங்களையும் அவற்றுக்கு எப்படி நன்றி காட்டலாம் என்பதைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம். இவற்றைக் கொடுத்த யெகோவாவின் மீது இன்னும் அதிக நன்றியைக் காட்டுவதற்கு இந்தக் கட்டுரைகள் உதவும்.