படிக்க டிப்ஸ்
“புது வரவு” பகுதியை எப்படி நன்றாகப் பயன்படுத்தலாம்?
JW லைப்ரரியிலும், jw.org-லும் வருகிற புதிய கட்டுரைகளும் வீடியோக்களும், “புது வரவு” என்ற பகுதியில் இருக்கும். புதிய வெளியீடுகள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தெரிந்துகொள்வதற்கு இந்தப் பகுதியை நீங்கள் எப்படிப் பயன்படுத்தலாம்?
JW லைப்ரரி
புதிதாக வெளியாகிற தனித்தனி கட்டுரைகளெல்லாம் அந்தந்த தொடர் கட்டுரைகளுக்கு உள்ளே இருக்கும். அதனால், “புது வரவு” பகுதியில் தொடர் கட்டுரைகளுக்கு அப்டேட் இருக்கிறது என்று உங்களுக்குக் காட்டினால், அதை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். பிறகு, டவுன்லோட் செய்ததை நீங்கள் கிளிக் செய்து, தேதிப்படி அதை வரிசைப்படுத்தினால் புதிய கட்டுரை முதலிலேயே இருக்கும்.
பத்திரிகைகள், புத்தகங்கள் போன்ற பெரிய பிரசுரங்கள் வெளியிடப்பட்டால், அதை ஒரே சமயத்தில் முழுமையாக வாசித்து முடிக்க முடியாது. அதுபோன்ற பிரசுரங்களை, “பிடித்தது” என்ற பகுதியில் நீங்கள் சேர்த்துக்கொண்டால் எப்போது வேண்டுமானாலும் ஈசியாக எடுத்து அதைத் தொடர்ந்து படிக்க முடியும். படித்து முடித்த பின், “பிடித்தது” பகுதியிலிருந்து நீங்கள் அதை எடுத்துவிடலாம்.
JW.ORG
செய்திகள், அறிவிப்புகள் போன்ற சில கட்டுரைகள் jw.org வெப்சைட்டில் மட்டும்தான் வெளியிடப்படும், JW லைப்ரரியில் வெளியிடப்படாது. அதனால், இந்தப் புதிய கட்டுரைகளை ஒன்றுவிடாமல் வாசிப்பதற்கு, வெப்சைட்டில் “புது வரவு” என்ற பகுதியைத் தவறாமல் செக் பண்ணுங்கள்.