உங்களுக்கு நினைவிருக்கிறதா?
இந்த வருஷத்தில் வந்த காவற்கோபுர பத்திரிகைகளைப் படித்தீர்களா? கீழே இருக்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா?
அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களை நாம் எப்படி நடத்த வேண்டும்?
அவர்களுடைய விசுவாசத்தை நாம் மதிக்கிறோம். ஆனால், அவர்களை அளவுக்கு அதிகமாக உயர்த்தக் கூடாது. அவர்களுடைய பரலோக நம்பிக்கை சம்பந்தமான தனிப்பட்ட கேள்விகளைக் கேட்கக் கூடாது.—w20.01, பக்கம் 29.
யெகோவா உங்களை கவனிக்கிறார் என்பதற்கு என்ன ஆதாரங்கள் இருக்கின்றன?
நீங்கள் பிறப்பதற்கு முன்பே யெகோவா உங்களை கவனித்திருக்கிறார் என்று பைபிள் சொல்கிறது. உங்கள் ஜெபங்களை அவர் கேட்கிறார். உங்களுடைய யோசனைகளைப் பற்றியும் உணர்ச்சிகளைப் பற்றியும் அவருக்கு நன்றாகத் தெரியும். உங்கள் செயல்கள் அவரை சந்தோஷப்படுத்தலாம் அல்லது துக்கப்படுத்தலாம். (1 நா. 28:9; நீதி. 27:11) தன்னிடம் அவர் உங்களை ஈர்த்திருக்கிறார்.—w20.02, பக்கம் 12.
நாம் எப்போது பேச வேண்டும், எப்போது பேசக் கூடாது என்பதற்கு சில உதாரணங்களைச் சொல்ல முடியுமா?
யெகோவாவைப் பற்றி நாம் சந்தோஷமாகப் பேசுகிறோம். யாராவது தவறான பாதையில் போய்க்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது அவர்களிடம் பேச வேண்டும். ஒரு சகோதரனுக்கோ சகோதரிக்கோ ஆலோசனை தேவைப்பட்டால், அதைக் கொடுப்பதற்கு மூப்பர்கள் தயங்கக் கூடாது. நம்முடைய வேலை தடை செய்யப்பட்ட ஒரு நாட்டில் வாழ்கிற சகோதர சகோதரிகளிடம், அந்த நாட்டில் நம்முடைய வேலைகள் எப்படி நடக்கின்றன என்று கேட்கக் கூடாது. (அதைப் பற்றி மற்றவர்களிடமும் சொல்லக் கூடாது.) ரகசியமாக வைக்கப்பட வேண்டிய விஷயங்களை யாரிடமும் சொல்லக் கூடாது.—w20.03, பக்கங்கள் 20-21.
யோவேல் 2-வது அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிற வெட்டுக்கிளிக் கூட்டத்துக்கும், வெளிப்படுத்துதல் 9-வது அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிற வெட்டுக்கிளிக் கூட்டத்துக்கும் இருக்கிற வித்தியாசங்கள் என்ன?
வெட்டுக்கிளிக் கூட்டத்தை கடவுள் தூரமாக விரட்டியடிப்பதாகவும், அவைகளால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டுவதாக அவர் வாக்குக் கொடுத்திருப்பதாகவும் யோவேல் 2:20-29 சொல்கிறது. அதற்குப் பின்பு, கடவுள் தன்னுடைய சக்தியைப் பொழிகிறார். இஸ்ரவேல் தேசத்தை பாபிலோன் தாக்கியபோதும் அதற்குப் பிறகும் இவை நிறைவேறின. வெளிப்படுத்துதல் 9:1-11-ல் இருக்கிற விஷயங்களின் அர்த்தம்: வெட்டுக்கிளிக் கூட்டத்தைப் போல் இருக்கிற அபிஷேகம் செய்யப்பட்டவர்கள், இந்த மோசமான உலகத்துக்கு அழிவு வரப் போகிறது என்ற நியாயத்தீர்ப்பு செய்தியை அறிவிக்கிறார்கள். இந்தச் செய்தி, உலகத்தின் பாகமாக இருக்க விரும்புகிறவர்களுக்கு வேதனையாகத்தான் இருக்கும்.—w20.04, பக்கங்கள் 3-6.
இன்று வடதிசை ராஜா யார்?
ரஷ்யாவும் அதன் கூட்டணி நாடுகளும்தான்! பிரசங்க வேலையைத் தடை செய்வதன் மூலமும், கடவுளுடைய மக்களை வெறுப்பதன் மூலமும் அவர்கள்மீது அவன் ஆதிக்கம் செலுத்திவருகிறான். தென்திசை ராஜாவோடு அவன் போட்டி போடுகிறான்.—w20.05, பக்கம் 13.
கலாத்தியர் 5:22, 23-ல் சொல்லியிருக்கிற குணங்கள் மட்டும்தான் ‘கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களா’?
இல்லை. நீதி போன்ற மற்ற அருமையான குணங்களை வளர்த்துக்கொள்ளவும் கடவுளுடைய சக்தி நமக்கு உதவுகிறது. (எபே. 5:8, 9)—w20.06, பக்கம் 17.
சோஷியல் மீடியாவில் நம்மைப் பற்றிய தகவலைப் போடுவதில் என்ன ஒரு ஆபத்து இருக்கிறது?
நீங்கள் போடுகிற தகவல்களைப் பார்த்து, நீங்கள் பெருமையடிக்கிற ஆள் என்றும், உங்களுக்கு மனத்தாழ்மை இல்லை என்றும் மற்றவர்கள் நினைத்துவிடலாம்.—w20.07, பக்கங்கள் 6-7.
திறமையான மீனவர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
எங்கே, எப்போது மீன்கள் அதிகம் கிடைக்குமோ அங்கே, அப்போது அவர்கள் மீன்பிடிப்பார்கள். சரியான கருவிகளைப் பயன்படுத்துவதற்கு பயிற்சி பெற்றிருப்பார்கள். வானிலை சாதகமாக இல்லாதபோதும் தைரியமாக மீன்பிடிக்கப் போவார்கள். ஊழியத்தில் நாமும் அவர்களைப் போல் இருக்க வேண்டும்.—w20.09, பக்கம் 5.
யெகோவாமேல் இருக்கிற அன்பை அதிகமாக்கிக்கொள்ள பைபிள் மாணவர்களுக்கு என்ன சில வழிகளில் உதவலாம்?
தினமும் பைபிளைப் படித்து, அதைப் பற்றி ஆழமாக யோசித்துப்பார்க்கும்படி அவர்களிடம் சொல்லலாம். ஜெபம் செய்வதற்கு அவர்களுக்குச் சொல்லித் தரலாம்.—w20.11, பக்கம் 4.
“கிறிஸ்துவினால் எல்லாரும் உயிரோடு எழுப்பப்படுவார்கள்” என்று 1 கொரிந்தியர் 15:22 சொல்கிறது. எல்லாரும் என்றால் யார்?
எல்லா மனிதர்களும் உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்று பவுல் சொல்லவில்லை. ‘கிறிஸ்து இயேசுவின் சீஷர்களாகப் பரிசுத்தமாக்கப்பட்டிருந்த’ அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களைப் பற்றித்தான் சொன்னார். (1 கொ. 1:3; 15:18)—w20.12, பக்கங்கள் 5-6.
அபிஷேகம் செய்யப்பட்டவர்கள், ‘கடைசி எக்காளம் முழங்கும்போது, . . . கண்ணிமைக்கும் நேரத்தில், . . . மாற்றம் அடைந்த’ பிறகு என்ன செய்வார்கள்?—1 கொ. 15:51-53.
கிறிஸ்துவோடு சேர்ந்து அவர்களும் இரும்புக் கோலால் தேசங்களை நொறுக்குவார்கள். (வெளி. 2:26, 27)—w20.12, பக்கங்கள் 12-13.