காவற்கோபுரம் எண் 2 2019 | வாழத்தான் வேண்டுமா?
ஏதாவது ஒரு பிரச்சினை இடிபோல் தாக்கியதால், ‘வாழ்ந்து என்ன பிரயோஜனம்’ என்று யோசித்திருக்கிறீர்களா?
வாழ்க்கையே வெறுத்துவிட்டதா?
எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும், நாம் வாழ்வதில் ஒரு அர்த்தம் இருக்கிறது.
பேரழிவில் சிக்கும்போது
இயற்கைப் பேரழிவில் நீங்கள் சிக்கியிருக்கிறீர்களா? அதன் பாதிப்புகளிலிருந்து மீண்டுவர சில முத்தான ஆலோசனைகளை பைபிள் தருகிறது.
பிரியமானவரைப் பறிகொடுக்கும்போது
பிரியமானவருடைய இழப்பைச் சமாளிப்பதற்கு உதவும் ஐந்து வழிகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.
துணையே துரோகம் செய்யும்போது
துணையின் துரோகத்துக்கு ஆளான நிறைய பேர், பைபிளிலிருந்து ஆறுதல் பெற்றிருக்கிறார்கள்.
தீராத நோயினால் தவிக்கும்போது
தீராத நோயைச் சிலர் எப்படிச் சமாளித்தார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
சாவதே மேல் என்று தோன்றும்போது
வேதனை தாங்க முடியாமல் வாழ்க்கையையே முடித்துக்கொள்ளலாம் என்று நீங்கள் எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? உங்களுக்கு எப்படி உதவி கிடைக்கும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
வாழ்க்கை வாழ்வதற்கே!
உங்களுடைய இக்கட்டான சூழ்நிலையை மற்ற மனிதர்கள் ஒருவேளை புரிந்துகொள்ளாமல் போகலாம். ஆனால், கடவுள் புரிந்துகொள்கிறார் என்று நீங்கள் உறுதியாக நம்பலாம். அவர் உங்கள்மேல் உயிரையே வைத்திருக்கிறார். உங்களுக்கு உதவி செய்யக் காத்திருக்கிறார்.
“அவர் உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார்”
இந்த பைபிள் வசனங்கள் உங்களுக்கு ஆறுதலையும் பலத்தையும் தரும்.