Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

முடிவு எடுப்பது இனி உங்கள் கையில்!

முடிவு எடுப்பது இனி உங்கள் கையில்!

நம் வாழ்க்கை சந்தோஷமாக இருக்குமா இல்லையா என்பது, நாம் எடுக்கும் முடிவுகளைப் பொறுத்துதான் இருக்கிறது. இது யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான், அவர் சொல்கிற மாதிரி நாம் வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

நாம் நிம்மதியாக, சந்தோஷமாக வாழ வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார்.

“யெகோவாவாகிய நானே உங்கள் கடவுள். உங்களுக்குப் பிரயோஜனமானதை நான் கற்றுக்கொடுக்கிறேன். நீங்கள் நடக்க வேண்டிய வழியில் உங்களை நடத்துகிறேன். நீங்கள் என்னுடைய கட்டளைகளைக் கேட்டு நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அப்போது, உங்கள் சமாதானம் ஆற்றைப் போலவும், உங்கள் நீதி கடல் அலைகளைப் போலவும் இருக்கும்.”—ஏசாயா 48:17, 18.

கடவுள் நம்முடைய படைப்பாளராக இருப்பதால், நாம் எப்படி வாழ்ந்தால் நன்றாக இருப்போம் என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும். அதனால்தான், அவர் சொல்கிற மாதிரி நாம் வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அப்படி வாழ்வது நமக்குத்தான் நல்லது. கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தால், நாம் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்குமா இல்லையா என்ற சந்தேகமே நமக்கு வேண்டாம். நிச்சயம் அது சரியாகத்தான் இருக்கும். அதோடு, நம் வாழ்க்கையும் நிம்மதியாக, சந்தோஷமாக இருக்கும்.

நம்மால் செய்ய முடியாத விஷயத்தை யெகோவா செய்யசொல்வதில்லை.

“நான் இன்று உங்களுக்குக் கொடுக்கிற இந்தக் கட்டளை நீங்கள் கடைப்பிடிக்க முடியாத அளவுக்குக் கஷ்டமானது இல்லை, கண்டுபிடிக்க முடியாத அளவுக்குத் தூரத்திலும் இல்லை.”—உபாகமம் 30:11.

கடவுளுக்குப் பிடித்த மாதிரி நாம் வாழ்வதற்காக, யோசிக்கிற விதத்திலும், நடந்துகொள்கிற விதத்திலும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கலாம். நம்மை படைத்த கடவுளுக்கு நம்மை பற்றி நன்றாகத் தெரியும். நம்மால் செய்ய முடியாததை அவர் நம்மிடம் எதிர்பார்க்க மாட்டார். யெகோவாவைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள தெரிந்துகொள்ள, “அவருடைய கட்டளைகள் பாரமானவை அல்ல” என்பதைப் புரிந்துகொள்வோம்.—1 யோவான் 5:3.

தான் சொல்கிறபடி வாழ ஆசைப்படுகிறவர்களுக்கு உதவி செய்வதாக யெகோவா வாக்கு கொடுத்திருக்கிறார்.

“யெகோவாவாகிய நான் உன்னுடைய வலது கையைப் பிடித்திருக்கிறேன். ‘பயப்படாதே, நான் உனக்கு உதவி செய்வேன்’ என்று சொல்கிறேன்.”—ஏசாயா 41:13.

கடவுளுக்குப் பிடித்த மாதிரி நம்மால் வாழ முடியும். ஏனென்றால், அதற்குக் கடவுளே உதவி செய்வதாக சொல்லியிருக்கிறார். அவருடைய வார்த்தையாகிய பைபிள் மூலம் நமக்குத் தேவையான நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுக்கிறார்.

பைபிள் சொல்வதுபோல் நடப்பதால், தங்களுடைய வாழ்க்கை சந்தோஷமாக இருப்பதாக லட்சக்கணக்கான மக்கள் ஒத்துக்கொள்கிறார்கள். பைபிளில் இருக்கும் முத்தான ஆலோசனைகளை நீங்களும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா? இன்றும் என்றும் சந்தோஷம்! என்ற புத்தகம் உங்களுக்கு உதவி செய்யும். jw.org-ல் இந்தச் சிறுபுத்தகத்தை இலவசமாக டவுன்லோட் செய்யலாம். அதில் மூன்று பாடங்கள் இருக்கின்றன. அதன் தலைப்பு:

  • கடவுள் தந்த வேதம் உங்களுக்கு எப்படி உதவும்?

  • கடவுள் தந்த வேதம் நம்பிக்கை தருகிறது

  • வேத புத்தகத்தை நம்ப முடியுமா?

பைபிள் ஏதோவொரு பழைய பஞ்சாங்கம் கிடையாது. அதிலிருக்கும் விஷயங்கள் நம் காலத்துக்கும் உதவும் என்பதை அதைப் படிக்கப் படிக்க நீங்களே புரிந்துகொள்வீர்கள். பைபிளை “எப்போதுமே நம்பலாம்; இன்றும் என்றும் நம்பலாம்.” (சங்கீதம் 111:8) பைபிள் சொல்வதுபோல் நாம் வாழும்போது நம் வாழ்க்கை நிஜமாகவே சூப்பராக இருக்கும். ஆனால் அப்படித்தான் நாம் வாழ வேண்டுமென்று கடவுள் நம்மைக் கட்டாயப்படுத்த மாட்டார். (உபாகமம் 30:19, 20; யோசுவா 24:15) அப்படி வாழ வேண்டுமா வேண்டாமா என்ற முடிவை நாம்தான் எடுக்க வேண்டும்.