Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விசுவாசம் நம் துணையே!

விசுவாசம் நம் துணையே!
  1. 1. இருள் சூழ்ந்திருந்த என் வாழ்க்கையிலே,

    வெளிச்சம் தரவே நீ வந்தாயே!

    சொல்ல வந்தாய் நற்செய்தியே!

    உன் மூலம் பெற்றேனே சத்யத்தையே!

    என் கவலை எல்லாமே போய்விட்டதே!

    வேதனைகள் பறந்ததே!

    (பல்லவி)

    விசுவாசம் நம் துணையே

    நம் வாழ்க்கை பாதையெல்லாம்!

    மேடு பள்ளங்கள் இருந்தாலும்,

    தாண்டி சென்றிடலாம்!

    தாண்டுவோம் நாம்!

  2. 2. நல் வார்த்தைகள் என் உள்ளத்தை தொட்டதே!

    எல்லோருக்கும் சொல்லவே தூண்டுதே!

    நல்ல செய்தி

    ப்ரசங்கிக்கவே!

    சிறிய தீ போலே விஸ்வாசம் தோன்றினால்,

    கொழுந்துவிட்டெரியும் நான் தூண்டினால்!

    எரிந்திடும் நான் தூண்டினால்!

    (பல்லவி)

    விசுவாசம் நம் துணையே

    என் நெஞ்சம் மறக்காதே!

    மேடு பள்ளங்கள் இருந்தாலும்,

    தாண்டி போவோம் நாமே!

    தாண்டுவோமே!

    (பிரிட்ஜ்)

    எந்தன் வாழ்வில் வீசும் சூறாவளியே!

    தஞ்சம் தேடி நான் போனேன், பதில் தந்தார் யெகோவா

    அவர் கையில் என்னை தந்தேனே!

    அடைக்கலம் புகுந்தேனே!

    என் துன்பங்கள் எல்லாமே

    பறந்தோடியதே!

    (பல்லவி)

    விசுவாசம் நம் துணையே

    என் நெஞ்சம் மறக்காதே!

    மேடு பள்ளங்கள் இருந்தாலும்,

    தாண்டி போவோம் நாமே!

    (பல்லவி)

    விசுவாசம் நம் துணையே

    என்றும் நம் வாழ்விலே!

    மேடு பள்ளங்கள் இருந்தாலும்,

    தாண்டி போவோம் நாமே!

    தாண்டுவோமே!