Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

என் முன் யெகோவா நிற்கிறார்!

என் முன் யெகோவா நிற்கிறார்!

டவுன்லோட்:

  • லீட் ஷீட்

  1. 1. அதிகாலை இருள் வெளுக்கின்றது

    என் நாளை தொடங்கும் பொன் நேரம் இது.

    நற்செய்தி சொல்லிட தடை போட்டார்கள்

    ஆனால் என் நெஞ்சம் அஞ்சிடாதே.

    (பல்லவி)

    பூந்தென்றலைப் போல, ஓர் நிம்மதி, என் நெஞ்சின் உள்ளே.

    என் முன் யெகோவா நிற்க, பின் ஏன் பயமே?

    என் முன் யெகோவா நிற்க, பின் ஏன் பயமே?

  2. 2. ஏதேதோ சோகங்கள் தனை வாட்டவே,

    ஓர் நண்பர் திறந்தார் தன் உள்ளத்தை.

    வழிகாட்டிட நானே ஏங்கினேனே.

    சத்யம்தானே அவர் மனம் தேற்றுமே.

    (பல்லவி)

    பூந்தென்றலைப் போல, ஓர் நிம்மதி, என் நெஞ்சின் உள்ளே.

    என் முன் யெகோவா நிற்க, பின் ஏன் பயமே?

    என் முன் யெகோவா நிற்க, பின் ஏன் பயமே?

    (பிரிட்ஜ்)

    என் நெஞ்சின் உள்ளே ஓர் தீ பிழம்பாய்

    என் தேவன் வார்த்தை பொங்கிவரும்.

    என் யெகோவா, பேர் புகழ்வேன்.

    என் உயிர் போனாலுமே நான் மகிழ்வேன்.

    என் ரத்த சொந்தங்கள் போராடுதே.

    என் விஸ்வாசத்தை நான் தீட்டுவேன்.

    யெகோவாவை நம்பி நான் வாழுவேன்.

    பூஞ்சோலை நாளை தோன்றிடுமே.

  3. 3. இருள் வந்து சூழும் இந்நேரத்தில்

    நன்றி சொல்கின்றது என் உள்ளமே.

    நாளை என்னாகுமோ நான் அறியேன்

    தனி இல்லை நானே, நான் அறிவேன்!

    (பல்லவி)

    பூந்தென்றலைப் போல, ஓர் நிம்மதி, என் நெஞ்சின் உள்ளே.

    என் முன் யெகோவா நிற்க, பின் ஏன் பயமே?

    என் முன் யெகோவா நிற்க, பின் ஏன் பயமே?