பாடல் 42
என் ஜெபம்
-
1. வான் தந்-தை-யே! என் வேண்-டு-தல் சொல்-வேன்;
உம் பெ-ய-ரே எல்-லோ-ரும் போற்-ற வேண்-டும்.
விண்-ணில் ம-லர்ந்-த உம் அ-ர-சே,
பூ-மி-யை ஆ-ளும் நாள் வ-ர வேண்-டும்.
அங்-கே கண்-ணீர் இல்-லா-மல்
வாழ்-வே-னே யெ-கோ-வா-வே!
-
2. ஒவ்-வொ-ரு நாள் என் தே-வை-கள் தந்-து,
என் ம-ன-தில் சந்-தோ-ஷம் கா-ண செய்-து,
யா-வும் யெ-கோ-வா உம் க-ரு-ணை.
மண்-ணி-லி-ருந்-து என்-னை வ-ரைந்-து,
ஸ்வா-சம் தந்-த என் தே-வன்
உ-மக்-கே என் நன்-றி-யே!
-
3. மே-கம் எல்-லாம் தன் நீர் வி-ழ நீங்-கும்;
சோ-கம் எல்-லாம் உம் நா-ளில் அற்-றுப்-போ-கும்.
இன்-று நான் கா-ணும் சோ-த-னை-கள்,
வென்-றி-ட வேண்-டும், உம் ப-லம் வேண்-டும்.
என்-னைத் தந்-தேன் உம் கை-யில்,
உ-மக்-கே என் ஜீ-வ-னே!
(பாருங்கள்: சங். 36:9; 50:14; யோவா. 16:33; யாக். 1:5.)