சுற்றிப் பார்ப்பதற்கான தகவல்கள்
சுற்றிப் பார்ப்பதற்கு முன்பதிவு செய்ய வேண்டுமா? ஆம். சுற்றிப் பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை எவ்வளவாக இருந்தாலும் சரி, அவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான், கூட்டம் அதிகமாகிவிடாமல் பார்த்துக்கொள்வதற்கு வசதியாக இருக்கும். அதோடு, சுற்றிப் பார்க்க வந்திருக்கும் எல்லாரும் முழு நன்மை அடைய முடியும்.
முன்பதிவு செய்யாமலேயே நீங்கள் சுற்றிப் பார்க்க வரலாமா? நீங்கள் முன்பதிவு செய்யவில்லை என்றாலும், பெத்தேலைச் சுற்றிப் பார்க்க உங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும் முன்பதிவு செய்துவிட்டு வரும்படி நாங்கள் உங்களை உற்சாகப்படுத்துகிறோம். அப்போதுதான் எங்களால் நன்றாகத் திட்டமிட முடியும்.
சுற்றிப் பார்ப்பதற்கு எவ்வளவு நேரத்துக்கு முன்பாக நீங்கள் வர வேண்டும்? நீங்கள் முன்பதிவு செய்திருக்கும் நேரத்திலிருந்து ஒரு மணிநேரத்துக்கு முன்பு அங்கு இருந்தால் போதும். அப்போதுதான், நெரிசல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
சுற்றிப் பார்க்க நீங்கள் எப்படி முன்பதிவு செய்யலாம்? “முன்பதிவு” என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.
முன்பதிவில் மாற்றங்கள் செய்யவோ அதை ரத்து செய்யவோ முடியுமா? ஆம். “முன்பதிவு விவரங்களைப் பார்க்க அல்லது மாற்ற” என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு வேண்டிய நாட்களில் முன்பதிவு செய்ய முடியவில்லை என்றால் என்ன செய்வது? அடிக்கடி வெப்சைட்டைப் பாருங்கள். யாராவது தங்களுடைய முன்பதிவில் மாற்றங்கள் செய்தாலோ அதை ரத்து செய்தாலோ, உங்களால் அந்த நாட்களில் முன்பதிவு செய்ய முடியும்.
முன்பதிவு
முன்பதிவு விவரங்களைப் பார்க்க அல்லது மாற்ற
பார்வையாளர் சிற்றேட்டை டவுன்லோட் செய்யவும்
முகவரி மற்றும் தொலைப்பேசி எண்
Santo 20, No. 9
Route de Croix-des-Bouquets
PORT-AU-PRINCE
HAÏTI
+509 2813 1560
+509 2813 1561
+509 2813 1562
வழி தெரிந்துகொள்ள