Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

நான் ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமா?—பாகம் 2: ஞானஸ்நானம் எடுக்க தயாராவது எப்படி?

நான் ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமா?—பாகம் 2: ஞானஸ்நானம் எடுக்க தயாராவது எப்படி?

 நீங்கள் பைபிள் சொல்கிறபடி நடக்கிறீர்கள்... கடவுளோடு நெருக்கமான பந்தத்தை வளர்த்துக்கொண்டிருக்கிறீர்கள். அப்படியென்றால், ஞானஸ்நானம் எடுப்பதைப் பற்றி ஒருவேளை யோசிப்பீர்கள். ஆனால் நீங்கள் உண்மையிலேயே அதற்குத் தயாராக இருக்கிறீர்கள் என்று எப்படித் தெரிந்துகொள்ளலாம்? a

இந்தக் கட்டுரையில்

 நான் எல்லாமே தெரிந்து வைத்திருக்க வேண்டுமா?

 நீங்கள் ஞானஸ்நானம் எடுக்க தயாராவதற்கு உங்கள் ஸ்கூலில் பரீட்சைக்கு படிக்கிற மாதிரி நிறைய விஷயங்களைப் படித்து மனப்பாடம் பண்ண வேண்டிய அவசியம் இருக்காது. பைபிள் சொல்வதுதான் உண்மை என்ற நம்பிக்கையை பலப்படுத்துவதற்காக உங்களுடைய “சிந்திக்கும் திறனை” நீங்கள் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டியிருக்கும். (ரோமர் 12:1) அதற்காக, இப்படியெல்லாம் நீங்கள் யோசித்துப் பாருங்கள்.

  •   கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும் உங்களுடைய வணக்கத்தை பெறுவதற்கு அவர் தகுதியானவர் என்றும் நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களா?

     பைபிள் இப்படிச் சொல்கிறது: “கடவுளை அணுகுகிறவன் அவர் இருக்கிறார் என்றும், அவரை ஊக்கமாகத் தேடுகிறவர்களுக்குப் பலன் கொடுக்கிறார் என்றும் நம்ப வேண்டும்.”—எபிரெயர் 11:6.

     உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் ஏன் கடவுள்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறேன்?’ (எபிரெயர் 3:4) ‘அவரைத்தான் வணங்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறேன்?’—வெளிப்படுத்துதல் 4:11.

     அதிகம் தெரிந்துகொள்ள:படைப்பா பரிணாமமா?—பாகம் 1: கடவுள் இருக்கிறார் என்று ஏன் நம்ப வேண்டும்?” என்ற தலைப்பில் பாருங்கள்.

  •   பைபிள் கடவுள் தந்த புத்தகம் என்று நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களா?

     பைபிள் இப்படிச் சொல்கிறது: “வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவை கற்றுக்கொடுப்பதற்கும், கண்டிப்பதற்கும், காரியங்களைச் சரிசெய்வதற்கும், கடவுளுடைய நீதிநெறியின்படி திருத்துவதற்கும் பிரயோஜனமுள்ளவையாக இருக்கின்றன.”—2 தீமோத்தேயு 3:16.

     உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘பைபிளில் இருப்பது மனிதர்களுடைய கருத்துகள் இல்லை என்று நான் ஏன் நம்புகிறேன்?’—ஏசாயா 46:10; 1 தெசலோனிக்கேயர் 2:13.

     அதிகம் தெரிந்துகொள்ள:பைபிள் எனக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கும்?—பகுதி 1: பைபிளை ஆராய்ந்து படியுங்கள்” என்ற தலைப்பில் பாருங்கள்.

  •   யெகோவா தன்னுடைய விருப்பத்தை செய்வதற்காக கிறிஸ்தவ சபையை பயன்படுத்துகிறார் என்று நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களா?

     பைபிள் இப்படிச் சொல்கிறது: “சபையின் மூலமும் கிறிஸ்து இயேசுவின் மூலமும் தலைமுறை தலைமுறையாக என்றென்றும் [கடவுளுக்கு] மகிமை சேரட்டும்.”—எபேசியர் 3:21.

     உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘கூட்டங்களில் சொல்லிக் கொடுக்கிற விஷயங்களை யெகோவா சொல்லிக் கொடுக்கிற விஷயங்களாகத்தான் பார்க்கிறேனா?’ (மத்தேயு 24:45) ‘என்னுடைய அப்பா அம்மா கூட்டங்களுக்கு போகவில்லை என்றாலும் (போக அவர்கள் அனுமதி கொடுத்தால்) நான் போகிறேனா?’—எபிரெயர் 10:24, 25.

     அதிகம் தெரிந்துகொள்ள:ராஜ்ய மன்றத்தில் நடக்கிற கூட்டங்களுக்கு ஏன் போக வேண்டும்?” என்ற தலைப்பில் பாருங்கள்.

 நான் என்ன செய்ய வேண்டும்?

 ஞானஸ்நானம் எடுக்க நீங்கள் ஆசைப்பட்டால் எல்லாவற்றையும் நூறு சதவீதம் கரெக்டாக செய்ய வேண்டும் என்று அவசியம் கிடையாது. அதற்குப் பதிலாக, நீங்கள் ‘கெட்டதைவிட்டு விலகி நல்லது செய்யத்தான்’ நிஜமாகவே ஆசைப்படுகிறீர்கள் என்பதைக் காட்ட வேண்டும். (சங்கீதம் 34:14) அதை எப்படிச் செய்யலாம்?

  •   யெகோவா சொல்கிறபடி நீங்கள் வாழ்கிறீர்களா?

     பைபிள் இப்படிச் சொல்கிறது: “நல்ல மனசாட்சியோடு இருங்கள்.”—1 பேதுரு 3:16.

     உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘சரி எது, தவறு எது என்பதைப் பிரித்துப் பார்ப்பதற்கு என்னுடைய பகுத்தறியும் திறன்களைப் பயன்படுத்திப் பயிற்றுவித்திருக்கிறேனா?’ (எபிரெயர் 5:14) ‘கெட்ட நண்பர்கள் தப்பு செய்ய தூண்டும்போது “முடியாது!” என்று நான் எப்போதாவது உறுதியாக சொல்லியிருக்கிறேனா? சரியானதை செய்வதற்கு என் நண்பர்கள் எனக்கு உதவி செய்கிறார்களா?’—நீதிமொழிகள் 13:20.

     அதிகம் தெரிந்துகொள்ள:என்னுடைய மனசாட்சியை எப்படிப் நான் பயிற்றுவிக்க வேண்டும்?” என்ற தலைப்பில் பாருங்கள்.

  •   நீங்கள் செய்கிற விஷயத்துக்கு நீங்களே பொறுப்பேற்றுக் கொள்கிறீர்களா?

     பைபிள் இப்படிச் சொல்கிறது: “நாம் ஒவ்வொருவரும் நம்முடைய செயல்களுக்காகக் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும்.”—ரோமர் 14:12.

     உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘எனக்கு நானே நேர்மையாக இருக்கிறேனா?’ ‘மற்றவர்களிடம் நான் நேர்மையாக நடந்துகொள்கிறேனா?’ (எபிரெயர் 13:18) ‘நான் ஏதாவது தப்பு செய்தால் அதை ஒத்துக்கொள்கிறேனா?’ ‘அதை மறைக்கப் பார்க்கிறேனா அல்லது மற்றவர்கள்மேல் பழி போடுகிறேனா?’—நீதிமொழிகள் 28:13.

     அதிகம் தெரிந்துகொள்ள:நான் தப்பு செய்தால் என்ன பண்ணுவது?” என்ற தலைப்பில் பாருங்கள்.

  •   யெகோவாவிடம் நீங்கள் எந்தளவுக்கு நெருக்கமாக இருக்கிறீர்கள்?

     பைபிள் இப்படிச் சொல்கிறது: “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்.”—யாக்கோபு 4:8.

     உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவாவிடம் நெருக்கமாக இருக்க நான் என்னவெல்லாம் செய்கிறேன்?’ ‘நான் அடிக்கடி பைபிள் படிக்கிறேனா?’ (சங்கீதம் 1:1, 2) ‘அடிக்கடி ஜெபம் பண்ணுகிறேனா?’ (1 தெசலோனிக்கேயர் 5:17) ‘நான் ஒரே மாதிரி ஜெபம் பண்ணுகிறேனா, இல்லையென்றால் என் மனதில் இருப்பதை எல்லாம் அப்படியே சொல்லி ஜெபம் பண்ணுகிறேனா? யெகோவாவின் நண்பர்கள் தான் எனக்கும் நண்பர்களா?’—சங்கீதம் 15:1, 4.

     அதிகம் தெரிந்துகொள்ள:பைபிள் எனக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கும்?—பகுதி 2: பைபிள் வாசிப்பதை சுவாரஸ்யமானதாக ஆக்குங்கள்” மற்றும் “நான் ஏன் ஜெபம் செய்ய வேண்டும்?” என்ற தலைப்புகளில் பாருங்கள்.

 டிப்ஸ்: ஞானஸ்நானம் எடுக்க தயாராவதற்கு, இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள், தொகுதி 2 அதிகாரம் 37-ஐப் பாருங்கள். முக்கியமாக, அதோடு உள்ள ஒர்க் ஷீட்டைப் பாருங்கள்.

a கடவுளுக்கு அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுப்பது என்றால் என்ன என்பதையும் அது ஏன் முக்கியம் என்பதையும் தெரிந்துகொள்ள “நான் ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமா?—பாகம் 1”-ஐப் படித்துப் பாருங்கள்.