கடவுள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டுமே குடியிருக்கிறாரா?
பைபிள் தரும் பதில்
ஆமாம். கடவுள் குறிப்பிட்ட ஒரு இடத்தில், அதாவது பரலோகத்தில், மட்டுமே குடியிருக்கிறார். இந்த பைபிள் வசனங்களைக் கவனியுங்கள்:
ஒருசமயம், சாலொமோன் ராஜா ஜெபம் செய்யும்போது, “நீங்கள் குடியிருக்கிற பரலோகத்திலிருந்து கேளுங்கள்” என்று சொன்னார்.—1 ராஜாக்கள் 8:43.
“பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே” என்று ஜெபம் செய்யும்படி இயேசு கிறிஸ்து தன்னுடைய சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.—மத்தேயு 6:9.
இயேசு உயிரோடு எழுப்பப்பட்ட பிறகு, ‘கடவுளுக்கு முன்னால் நமக்காகத் தோன்றும்படி பரலோகத்துக்குள்’ போனார்.—எபிரெயர் 9:24.
யெகோவா தேவன் நிஜமான ஒரு நபர் என்பதையும், அவர் எல்லா இடங்களிலும் அல்ல, ஆனால் பரலோகத்தில் மட்டுமே குடியிருக்கிறவர் என்பதையும் இந்த வசனங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.