இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்—பைபிளிலுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள்
இந்தத் தொடர் கட்டுரைகள், பைபிள் காலத்தில் வாழ்ந்த ஆண்களும் பெண்களும் காட்டிய விசுவாசத்தை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும். a அவர்களைப் பற்றியும் அவர்கள் காட்டிய விசுவாசத்தைப் பற்றியும் படிப்பது உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்தும், கடவுளிடம் நெருங்கிப் போகவும் உதவும்.
பைபிள் காலத்தில் கடவுளுக்கு உண்மையாக வாழ்ந்தவர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள, இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள் என்ற வீடியோ தொடர் உங்களுக்கு உதவும்.
a இந்த கட்டுரையில் வரும் காட்சிகளை மணக்கண்ணில் பார்ப்பதற்கும் அவற்றை உணர்வதற்கும் உதவியாக இருக்கும் சில விவரிப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை ஒருவேளை பைபிளில் இல்லாமல் இருக்கலாம். ஆனால், இந்த விவரிப்புகள் பைபிள் பதிவுகளோடும் சரித்திரத்தோடும் அகழாய்வுகளோடும் ஒத்துப்போவதற்காக கவனமாக ஆராய்ச்சி செய்திருக்கிறோம்.
படைப்புமுதல் பெருவெள்ளம்வரை
ஆபேல்—‘இறந்துவிட்டபோதிலும் . . . இன்னமும் பேசுகிறார்’
பைபிளில் ஆபேலை பற்றி அதிகமாக சொல்ப்படவில்லை என்றாலும் நாம் அவரை பற்றியும் அவர் காட்டிய விசுவாசத்தை பற்றியும் என்ன கற்றுக்கொள்ளலாம்?
ஏனோக்கு—‘கடவுளுக்கு பிரியமாக நடந்துகொண்டார்’
குடும்பத்தை நல்லபடியாக பார்த்துக்கொள்ள... சரியானதை செய்ய... நீங்கள் போராடிக்கொண்டிருந்தால் ஏனோக்கின் விசுவாசத்திலிருந்து நீங்கள் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.
நோவா—‘தேவனோடு நடந்தார்’
பிள்ளைகளை வளர்ப்பதில் நோவாவும் அவருடைய மனைவியும் என்ன பிரச்சினைகளை சந்தித்தார்கள்? பேழையை கட்டுவதில் நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் எப்படி விசுவாசத்தை காட்டினார்கள்?
நோவா குடும்பமாக “காப்பற்றப்பட்டார்”
மனித சரித்திரத்திலேயே நடந்த படு பயங்கரமான அழிவிலிருந்து நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் எப்படித் தப்பிப்பிழைத்தார்கள்?
The Days of the Patriarchs
ஆபிரகாம்—‘விசுவாசிக்கிற அனைவருக்கும் தகப்பன்’
ஆபிரகாம் எப்படி கடவுளுக்கு உண்மையாக இருந்தார்? ஆபிரகாமின் விசுவாசத்தை நீங்கள் எப்படி பின்பற்றலாம்?
சாராள்—“நீ பார்ப்பதற்கு ரொம்ப அழகாக இருக்கிறாய்!”
எகிப்தில் இருந்தபோது, அழகான சாராள் பார்வோனின் அதிகாரிகளுடைய கண்ணில்பட்டாள். அடுத்து என்ன நடந்தது என்று தெரிந்துகொண்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
சாராள்—கடவுள் இவளை “இளவரசி” என்று அழைத்தார்
சாராளுக்குக் கிடைத்த புது பெயர் அவளுக்குப் பொருத்தமாக இருந்தது என்று ஏன் சொல்லலாம்?
யோசேப்பு—“நான் கடவுளுக்கு இணையானவனா?”
பொறாமை, வெறுப்பு, துரோகம் போன்றவற்றால் உங்கள் குடும்பத்தில் பிரச்சினைகள் வந்திருக்கிறதா? இந்த விஷயத்தில் யோசேப்பின் உதாரணத்திலிருந்து நீங்கள் நிறைய கற்றுக்கொள்ளலாம்.
யோபு—“என்னுடைய உத்தமத்தை விட மாட்டேன்”
கஷ்டங்களும் எதிர்பாராத வேதனைகளும் வேறு விதமான சோதனைகளும் நம்மைத் தாக்கும்போது யோபுவின் கதை நமக்கு எப்படித் தெம்பு கொடுக்கும்?
The Exodus and the Days of the Judges
ரூத்—‘நீங்கள் போகும் இடத்திற்கு நானும் வருவேன்’
சொந்த நாட்டையும் குடும்பத்தையும் விட்டு போக ரூத் ஏன் தயாராக இருந்தார்? அவள் காட்டிய எந்த குனங்களால் அவள் யெகோவாவுக்கு மதிப்பு உள்ளவளாக ஆனாள்?
ரூத்—‘குணசாலியான பெண்’
ரூத்துக்கும் போவாசுக்கும் நடந்த கல்யானம் ஏன் விசேஷமானது? குடும்பத்தில் இருக்கிறவர்கள் ஒருவரோடு ஒருவர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை ரூத் மற்றும் நகோமியிடமிருந்து எப்படி கற்றுக்கொள்ளலாம்?
அன்னாள்—மனக்குமுறல்களைக் கடவுளிடம் கொட்டினாள்
சமாளிக்கவே முடியாது என்று நினைத்த சூழ்நிலைமையை கூட கடவுள் மீது இருந்த விசுவாசத்தினால் அன்னாள் சமாளித்தாள்.
சாமுவேல்—“யெகோவாவின் துணையோடு வளர்ந்துவந்தான்”
சாமுவேலின் குழந்தை பருவம் எந்த விதத்தில் வித்தியாசமாக இருந்தது? வழிபாட்டு கூடாரத்தில் அவர் வளர்ந்தது, கடவுள் மீது அவருக்கு இருந்த விசுவாசத்தை அதிகரிக்க எப்படி உதவியது?
சாமுவேல்—ஏமாற்றங்கள் மத்தியிலும் சகித்திருந்தார்
நம்முடைய வாழ்க்கையிலும் நிறைய கஷ்டங்களும் ஏமாற்றங்களும் வருகின்றன. அதையெல்லாம் சகிப்பதற்கு சாமுவேலின் உதாரணம் நமக்கு எப்படி உதவுகிறது?
The Days of Kings and Prophets
யோனத்தான்—‘யெகோவாவை யாராலும் தடுக்க முடியாது’
யோனத்தான் ஒரேவொரு வீரனோடு போய், பலம்படைத்த எதிரி படையை வீழ்த்தி, சரித்திரம் படைத்தார்.
தாவீது—‘யுத்தம் யெகோவாவுடையது’
கோலியாத்தை வீழ்த்த தாவீதுக்கு எது உதவியது? இந்தச் சம்பவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
“தாவீதும் யோனத்தானும் நெருங்கிய நண்பர்களானார்கள்”
வித்தியாசப்பட்ட பின்னணி மற்றும் வயதில் இருக்கும் இரண்டு நபர்கள் எப்படி இந்தளவு நெருங்கிய நண்பர்களானார்கள்? நாம் இன்று நல்ல நண்பர்களாக இருக்க இவர்களுடைய அனுபவம் எப்படி உதவும்?
அபிகாயில்—புத்திசாலியாக நடந்துகொண்டாள்
நாபாலை கல்யாணம் செய்ததால் அபிகாயில் நிறைய கஷ்டங்களை அனுபவித்தாள். அதை அவள் சமாளித்த விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
எலியா—தூய வழிபாட்டுக்குத் தூணாய் நின்றார்
பைபிள் சொல்வதை ஒத்துக்கொள்ளாத ஒருவரிடம் எப்படி நடந்துகொள்வது என்று எலியாவிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
எலியா—விழிப்புடன் இருந்தார், காத்திருந்தார்
கொடுத்த வாக்கை யெகோவா கண்டிப்பாக நிறைவேற்றுவார் என்று எலியா உறுதியாக நம்பினார். அதை எப்படி காட்டினார்?
எலியா—கடவுளிடம் ஆறுதல் பெற்றார்
என்ன பிரச்சினையை வந்ததால் சாக வண்டும் என்று எலியா நினைத்தார்?
எலியா—அவர் முடிவுவரை சகித்திருந்தார்
எலியா விசுவாசத்தோடு சகித்திருந்தார். அவருடைய உதாரணம், கஷ்ட காலங்களில் நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ள நமக்கு உதவும்.
யோனா—தவறுகளிலிருந்து பாடம் கற்றார்
ஒரு நியமிப்பை ஏற்றுக்கொள்ள யோனா பயந்தார். உங்களால் அவருடைய உணர்ச்சிகளை புரிந்துகொள்ள முடிகிறதா? யெகோவா எவ்வளவு பொறுமையானவர், இரக்கமானவர் என்பதை யோனாவின் கதையிலிருந்து தெரிந்துகொள்கிறோம்.
யோனா—இரக்கத்தைக் கற்றுக்கொண்டார்
நமக்குள் எதாவது தவறான எண்ணங்கள் இருக்கிறதா என்பதை பார்ப்பதற்கு யோனாவின் பதிவு நமக்கு எப்படி உதவும்?
எஸ்தர்—கடவுளுடைய மக்களுக்காகத் துணிந்து செயல்பட்டாள்
எஸ்தரை போல் சுயநலம் இல்லாத உண்மையான அன்பை காட்டுவதற்கு விசுவாசமும் தைரியமும் தேவை.
எஸ்தர்—ஞானமாய், தைரியமாய், தன்னலமின்றி செயல்பட்டாள்
யெகோவாவுக்காகவும் அவருடைய மக்களுக்காகவும் எஸ்தர் எப்படி சுயநலம் இல்லாமல் நடந்துகொண்டாள்?
The First Century
மரியாள்—‘இதோ, நான் யெகோவாவுக்கு அடிமை!’
காபிரியேல் தூதனிடம் மரியாள் சொன்ன பதிலிலிருந்து அவளுடைய விசுவாசத்தை பற்றி என்ன தெரிந்துகொள்கிறோம்? வேறு என்ன நல்ல குணங்களை அவள் காட்டினாள்?
மரியாள்—‘இருதயத்தில் பதித்து ஆழ்ந்து யோசித்தாள்’
பெத்லகேமில் நடந்த சம்பவங்கள் யெகோவாவின் வாக்குறுதிகள் மீது மரியாளுடைய நம்பிக்கையை அதிகரித்தது.
மரியாள்—வேதனையின் வாளை வெற்றிகரமாகச் சமாளித்தார்
துயரத்தின் ‘நீண்ட வாளை’ அனுபவித்து வருகிறீர்கள் என்றால், இயேசுவின் தாய் மரியாளுடைய உதாரணம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
யோசேப்பு—பாதுகாத்தார்... பராமரித்தார்... பொறுப்பை செய்துமுடித்தார்!
யோசேப்பு அவருடைய குடும்பத்தை எப்படி பாதுகாத்தார்? அவர் ஏன் மரியாளையும் இயேசுவையும் எகிப்துக்கு ஏன் கூட்டிக்கொண்டு போனார்?
மார்த்தாள்—‘நான் நம்புகிறேன்’
ரொம்ப சோகமாக இருந்தபோதும் எப்படி கடவுள்மீது முழு நம்பிக்கையோடு இருந்தார்?
பேதுரு—பயத்தையும் சந்தேகத்தையும் போக்க போராடினார்
சந்தேகப்படுவது ரொம்ப ஆபத்தானது. பேதுரு அவருடைய சந்தேகத்தையும் பயத்தையும் விட்டுவிட்டார், நம்பிக்கையோடு இயேசுவை தொடர்ந்து பின்பற்றினார்.
பேதுரு—சோதனைகள் மத்தியிலும் உண்மையாய் இருந்தார்
பேதுரு இயேசுமீது நம்பிக்கை வைத்தார், அவருக்கு உண்மையாக இருந்தார். இயேசு அவரை திருத்தியபோது அதை ஏற்றுக்கொள்ள இந்த குணங்கள் அவருக்கு எப்படி உதவியது?
பேதுரு—மன்னிக்கக் கற்றுக்கொண்டார்
மன்னிப்பதை பற்றி பேதுருவுக்கு இயேசு என்ன சொல்லிக்கொடுத்தார்? பேதுருவை மன்னித்துவிட்டார் என்பதை இயேசு எப்படி காட்டினார்?