தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்துவதற்கான உலகளாவிய கொள்கை
நீங்கள் எந்தக் காரணத்துக்காக உங்களுடைய தனிப்பட்ட விவரங்களைக் கொடுக்கிறீர்களோ அந்தக் காரணத்துக்காக மட்டுமே அவற்றை உங்களிடமிருந்து பெற்று, அவற்றைப் பாதுகாத்து வைத்து, பயன்படுத்துவோம். அந்த விவரங்களைப் பெற்றுக்கொண்டதற்கான நோக்கம் நிறைவேறும்வரை அல்லது அதற்கு பொருந்துகிற சட்டப்படியான நோக்கங்கள் நிறைவேறும்வரை அவற்றை வைத்திருப்போம். இப்படிப்பட்ட சமயங்களில், நாங்கள் உங்களிடம் கேட்ட தனிப்பட்ட விவரங்களில் சிலவற்றை நீங்கள் கொடுக்கவில்லை என்றால், இந்த வெப்சைட்டில் அல்லது உவாட்ச்டவர் பைபிள் அண்ட் ட்ராக்ட் சொஸைட்டி ஆஃப் நியு யார்க், இன்க்-ல் வழங்குகிற தொடர்புடைய மற்ற ஆப்களில் உள்ள பகுதிகள் சிலவற்றை உங்களால் பயன்படுத்த முடியாமல் போகலாம். அல்லது உங்கள் கோரிக்கையை எங்களால் நிறைவேற்ற முடியாமல் போகலாம்.
உங்களுடைய கோரிக்கையிலோ விண்ணப்பத்திலோ நீங்கள் கொடுத்திருக்கும் விவரங்களை, அவற்றைப் பரிசீலனை செய்பவர்களால் அல்லது கம்ப்யூட்டர் புரோகிராம்களை இயக்கி அவற்றைப் பராமரிக்கிற நிபுணர்களால் பார்க்க முடியும். சிலசமயம் இவர்கள் இருவராலும் பார்க்க முடியும். பின்வரும் காரணங்களுக்காக மட்டுமே உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை மற்றவர்களிடம் கொடுப்போம்: (1) உங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு அப்படிச் செய்வோம். இதைப் பற்றி உங்களிடம் முழுமையாகத் தெரிவித்திருப்போம். (2) சட்டங்களுக்கோ விதிமுறைகளுக்கோ உட்பட்டு அந்த விவரங்களைக் கொடுப்பது நியாயமாக இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தால் அதைத் தெரியப்படுத்துவோம். (3) அரசாங்க அதிகாரிகள் கேட்கும்போது அதைத் தெரியப்படுத்துவோம். அல்லது, (4) பாதுகாப்பு அல்லது கம்ப்யூட்டர் புரோகிராம் சம்பந்தப்பட்ட மோசடிகளைக் கண்டறிவதற்கும் தடுப்பதற்கும் அந்த விவரங்கள் தேவைப்படுமானால் அவற்றைக் கொடுப்போம். இந்த வெப்சைட்டையும் அது தொடர்புடைய மற்ற ஆப்களையும் பயன்படுத்துவதன் மூலம், மேலே குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களுக்காக உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை மூன்றாம் தரப்பினர்களுக்கு நாங்கள் தெரியப்படுத்துவதற்கு உங்களுடைய ஒப்புதலைத் தருகிறீர்கள். எந்தக் காரணத்துக்காகவும் உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை நாங்கள் விற்கவோ, வியாபாரம் செய்யவோ, வாடகைக்குக் கொடுக்கவோ மாட்டோம்.
வெப்சைட்டில் தனிப்பட்ட விவரங்களின் பயன்பாடு
இந்த வெப்சைட்டில் இருக்கும் பெரும்பாலான விஷயங்களைப் பயன்படுத்துவதற்கு, ஒருவர் பதிவு செய்யப்பட்ட பயனராக (registered user) இருக்க வேண்டியதில்லை; எந்த விவரத்தையும் எங்களுக்கு அளிக்க வேண்டியதும் இல்லை. ஆனால் சில விஷயங்களைப் பயன்படுத்த, பதிவு செய்யப்பட்ட பயனராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட பயனர்களால்தான், குறிப்பிட்ட சில கோரிக்கைகளையோ விண்ணப்பங்களையோ அளிக்க முடியும்; அல்லது யெகோவாவின் சாட்சிகளுடைய ஏதாவது ஒரு சபையின் மூலம் jw.org-ல் தங்களுடைய தனிப்பட்ட விவரங்களை அனுப்ப முடியும். உங்களுடைய ஒப்புதலின் அடிப்படையில்தான் உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை நாங்கள் பயன்படுத்துவோம். சில சமயங்களில், உங்களுடைய ஒப்புதலை நீங்கள் ரத்து செய்தாலும் சட்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும்வரை, உங்களுடைய தனிப்பட்ட விவரங்களைத் தொடர்ந்து பயன்படுத்த எங்களுக்குச் சட்டப்படி அனுமதி இருக்கலாம்.
இந்த வெப்சைட்டில் நீங்கள் அளிக்கும் தனிப்பட்ட விவரங்கள் எந்தக் காரணத்துக்காக உங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டதோ அந்தக் காரணத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். அந்தக் காரணங்களில் சில:
கணக்குகள். இந்த வெப்சைட்டில் நீங்கள் ஒரு கணக்கை ஆரம்பிக்கும்போது நீங்கள் கொடுக்கும் ஈ-மெயில் ஐ.டி., உங்களுடைய கணக்கு சம்பந்தமாக உங்களைத் தொடர்புகொள்ள பயன்படுத்தப்படலாம். உதாரணத்துக்கு, உங்களுடைய பயனர் பெயரையோ பாஸ்வர்டையோ ஒருவேளை நீங்கள் மறந்துவிட்டதால் லாகின் செய்ய எங்களிடம் உதவி கேட்கும்போது, நீங்கள் அளித்த ஈ-மெயில் ஐ.டி.-க்கு ஒரு மெசேஜ் அனுப்பப்படும்.
என் சுயவிவரப் பக்கம். நீங்கள் ஒரு கணக்கை உருவாக்கிய பிறகு, என் சுயவிவரப் பக்கத்துக்கான அம்சத்தை பயன்படுத்த உங்கள் சபைச் செயலாளர் உங்களுக்கு அனுமதி வழங்கலாம். hub.jw.org-ல் உங்கள் சுயவிவரப் பக்கத்தில் கூடுதல் தனிப்பட்ட தகவலைச் சேர்க்க நீங்கள் விரும்பினால், சாத்தியமான விரிவாக்கப்பட்ட சேவைக்கு உங்களை அடையாளம் காணவும் உங்களைத் தொடர்புகொள்ளவும் அந்த கூடுதல் தகவலைப் பயன்படுத்த ஒப்புக்கொள்கிறீர்களா என்று உங்களிடம் கேட்கப்படும். நீங்கள் ஒரு திட்டத்துக்கு உதவி செய்து, உங்கள் என் சுயவிவரப் பக்கத்தில் திறன்களைச் சேர்த்தால், ஒரு திறன் மதிப்பீடுபவர் உங்கள் திறன்களை மதிப்பிடலாம். உங்கள் தகவல்கள் செயலாக்கப்படுவதற்கு, தேவைப்பட்டால், யெகோவாவின் சாட்சிகளின் பிற கிளை அலுவலகங்கள், யெகோவாவின் சாட்சிகளின் உலக தலைமையகம் அல்லது பல்வேறு நாடுகளில் உள்ள யெகோவாவின் சாட்சிகளால் பயன்படுத்தப்படும் இதேபோன்ற பிற ஒத்துழைப்பு அமைப்புகளுடனும் பகிர்ந்து கொள்ளப்படலாம்.
விண்ணப்பங்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய நம்பிக்கைகளின்படியும் கொள்கைகளின்படியும் நீங்கள் தகுதிபெற்றால், உங்களுடைய பயனர் கணக்கைத் தொடங்குவதற்கும், ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கும் இந்த வெப்சைட்டைப் பயன்படுத்தலாம். அல்லது உங்கள் சபை உங்கள் சார்பாக ஒரு விண்ணப்பத்தை அனுப்ப இந்த வெப்சைட்டைப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு விண்ணப்பமும் எதற்காகப் பயன்படுத்தப்படும் என்பதை அந்த விண்ணப்பத்தைப் பார்த்தாலே தெரியும். அவற்றில் சில, மத சேவையை விரிவுபடுத்துவதற்காக விண்ணப்பிப்பது, மாநாடுகள் அல்லது வேறு ஏதாவது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்களுக்குத் தங்கும் வசதிகளைக் கேட்பதற்காகவோ செய்துகொடுப்பதற்காகவோ விண்ணப்பிப்பது. உங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் அடங்கிய ஒரு விண்ணப்பத்தில் நீங்களோ உள்ளூர் மூப்பர்களோ உள்ளூர் வட்டாரக் கண்காணியோ அளிக்கும் தனிப்பட்ட தகவல்கள் இருக்கலாம். நீங்கள் அளித்த விவரங்கள் உங்களுடைய விண்ணப்பத்தை பரிசீலனை செய்வதற்கும், அதோடு விண்ணப்பத்தைப் பயன்படுத்துவதற்காக உங்களுடைய புரொஃபைலை உருவாக்குவது உட்பட நிர்வாக சம்பந்தப்பட்ட வேலைகளுக்கும் மட்டுமே பயன்படுத்தப்படும். தேவைப்பட்டால் உங்களுடைய விண்ணப்பத்தை பரிசீலனை செய்வதற்கு, அந்த விண்ணப்பத்திலுள்ள விவரங்கள் மற்ற கிளை அலுவலகங்களுக்கோ, யெகோவாவின் சாட்சிகளுடைய உலகத் தலைமை அலுவலகத்துக்கோ, அல்லது மற்ற நாடுகளிலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் அமைப்புகளுக்கோ அனுப்பப்படலாம். விண்ணப்பங்கள் எல்லாமே தனித்தனியாகப் பரிசீலனை செய்யப்படும். இயந்திரத்தனமாக தீர்மானம் எடுக்கப்படாது.
நிகழ்வுகள். ஒரு நிகழ்வில் பங்கேற்க, விண்ணப்பிக்க அல்லது வாலண்டியராக சேவை செய்ய நீங்கள் விரும்பினால் கீழேயுள்ள தகவலைப் பார்க்கவும். மாநாடுகள், கட்டுமான வேலை, நிவாரண வேலைகள், விசேஷ ஊழியம் போன்றவை நிகழ்வுகளில் அடங்கும்.
நிகழ்வு வாலண்டியர்கள். நிகழ்வுக்குப் பயன்படுத்தப்படும் தனிப்பட்ட தகவலில் உங்களை தொடர்புகொள்ளும் தகவல், வயது, தயார் நிலை, திறமைகள் மற்றும் நிகழ்வில் வாலண்டியராக சேவை செய்ய நீங்கள் சமர்ப்பிக்கும் வேறு எந்த தகவலும் உள்ளடங்கும். நீங்கள் ஒரு நிகழ்வில் வாலண்டியராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அந்த நிகழ்வை நடத்தும் அல்லது ஏற்பாடு செய்யும் யெகோவாவின் சாட்சிகளின் கிளை அலுவலகத்துடன் உங்கள் தனிப்பட்ட தகவல் பகிர்ந்துகொள்ளப்பட்டு, அவர்களால் பயன்படுத்தப்படும். இதில் மாநாடு மற்றும் விருந்தோம்பல் குழுக்கள் போன்ற நிகழ்வு குழுக்களில் பணியாற்றும் மற்றும் அவற்றில் பணிபுரியும் தனிநபர்களும் அடங்குவர். நிகழ்வுகளை திட்டமிட மற்றும் நிகழ்வுடன் இணைக்கப்பட்ட நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க அவர்கள் உங்கள் தனிப்பட்ட தகவலை பயன்படுத்துவார்கள். நியமிக்கப்பட்ட வாலண்டியர் சேவைக்கான நேரத்தில் வருகிற மாற்றங்களை நிறைவேற்ற தேவைப்பட்டால் உங்கள் தனிப்பட்ட தகவல் மூன்றாம் தரப்பு வழங்குநர்களுடன் பகிரப்படும். உங்கள் தனிப்பட்ட தகவலை வழங்க வேண்டாம் என்று நீங்கள் தேர்வுசெய்தால் அல்லது உங்கள் தனிப்பட்ட தகவலை நீக்கக் கோரினாள், நிகழ்வில் வாலண்டியராக செயல்பட நீங்கள் இனி தகுதி பெறாமல் போகலாம். உங்கள் தனிப்பட்ட தகவல் இனிமேல் தேவையில்லை என்னும் பட்சத்தில் அது நீக்கப்படும்.
நிகழ்வு: விசேஷ மற்றும் உலகளாவிய மாநாடுகள். விசேஷ அல்லது உலகளாவிய மாநாட்டுக்கு (“மாநாட்டு”) போவதற்கு விண்ணப்பிக்க நீங்கள் தகுதி பெற்றால், நீங்கள் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம். மேலே உள்ள “விண்ணப்பங்கள்” என்ற துணைத் தலைப்பின் கீழ் அனைத்து விண்ணப்பங்களுக்கும் பொருந்துகிற கூடுதல் தகவலைப் பார்க்கவும்.
பிரதிநிதிகள். உங்கள் தொடர்புத் தகவல், பிறந்த தேதி, குழுத் தகவல், தங்குமிடத் தகவல், வருகை மற்றும் புறப்படும் தகவல் மற்றும் மாநாட்டிற்குத் தேவையான பிற தகவல் ஆகியவை மாநாட்டிற்குப் பயன்படுத்தப்படும் தனிப்பட்ட தகவலில் உள்ளடக்கியிருக்கும். நீங்கள் ஒரு மாநாட்டில் கலந்துகொள்ள பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மாநாடு மற்றும் விருந்தோம்பல் குழுக்களில் பணியாற்றும் நபர்கள் உட்பட, மாநாட்டை நடத்தும் யெகோவாவின் சாட்சிகளின் கிளை அலுவலகத்துடன் பகிர்ந்துகொள்ளப்படும் மற்றும் பயன்படுத்தப்படும். மாநாட்டுத் திட்டமிடல், உங்களின் பயணம் மற்றும் பயணம் தொடர்பான தேவைகளைக் கவனித்துக்கொள்ளவும், மாநாட்டுடன் தொடர்புடைய நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளை ஒழுங்கமைக்கவும் உங்கள் தனிப்பட்ட தகவல்களை அவர்கள் பயன்படுத்துவார்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த ஹோட்டல், அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் மூன்றாம் தரப்பு வழங்குநர்களுடன் உங்கள் முன்பதிவுகளைச் செயலாக்குவதற்கும், ஹோட்டலில் நீங்கள் தங்குவதற்குத் தேவையான பிற நோக்கங்களுக்காகவும் உங்கள் தனிப்பட்ட தகவல் பகிரப்படும். நீங்கள் தேர்ந்தெடுத்த செயல்பாடுகள் தொடர்பான சேவைகளை வழங்கும் மூன்றாம் தரப்பு வழங்குநர்களுடனும் உங்கள் தனிப்பட்ட தகவல் பகிரப்படும். உங்கள் தனிப்பட்ட தகவலை வழங்க வேண்டாம் என நீங்கள் தேர்வுசெய்தால் அல்லது உங்கள் தனிப்பட்ட தகவலை நீக்குமாறு கோரினால், மாநாட்டின் பிரதிநிதியாக நீங்கள் தகுதிபெற முடியாது. உங்கள் தனிப்பட்ட தகவலுக்கான தேவை தீர்ந்தவுடன் அதை நீக்கிவிடுவோம்.
நிகழ்வு: விசேஷ ஊழிய ஏற்பாடு. விசேஷ ஊழிய ஏற்பாடுக்கு விண்ணப்பிக்க நீங்கள் தகுதி பெற்றிருந்தால், ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க இந்த வெப்சைட்டை பயன்படுத்தலாம். மேலே உள்ள “விண்ணப்பங்கள்” என்ற துணைத் தலைப்பின் கீழ் அனைத்து பயன்பாடுகளுக்கும் பொருந்தும் கூடுதல் தகவலைப் பார்க்கவும். விசேஷ ஊழிய ஏற்பாட்டில் பங்கேற்க நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், உங்கள் தனிப்பட்ட தகவல்களை விசேஷ ஊழிய ஏற்பாட்டை நடத்தும் யெகோவாவின் சாட்சிகளின் கிளை அலுவலகத்துடன் பகிர்ந்துகொள்ளப்படும் மற்றும் பயன்படுத்தப்படும். விசேஷ ஊழிய ஏற்பாடுக்கு பயன்படுத்தப்படும் தனிப்பட்ட தகவல்களில் உங்களைத் தொடர்புக்கொள்ளும் தகவல், தொகுதி தகவல், தங்குமிடம் பற்றிய தகவல், வருகை மற்றும் புறப்படும் தகவல், மொழித் தேர்ச்சி மற்றும் விசேஷ ஊழிய ஏற்பாடுக்கு தேவையான நீங்கள் சமர்ப்பிக்கும் வேறு எந்தத் தகவல்களும் அதில் அடங்கும். ஹோஸ்ட் கிளையில் உள்ள விசேஷ ஊழிய ஏற்பாடுக்கான குழு உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி விசேஷ ஊழிய ஏற்பாட்டை ஒழுங்கமைக்கும், உங்களை ஒரு பிராந்தியத்திற்கு நியமிக்கும், மற்றும் தங்குமிடங்களை ஏற்பாடு செய்யும். உங்களுக்கு நியமிக்கப்பட்ட பிராந்தியத்தின் சபை மூப்பர்களைத் தொடர்புகொண்டு ஹோஸ்ட் செய்யும் பிராந்தியம் உங்கள் தனிப்பட்ட தகவலைப் பயன்படுத்தி பிராந்தியத்திற்குள் விசேஷ ஊழிய ஏற்பாட்டை ஒழுங்கமைப்பார்கள். உங்கள் தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம் என்று நீங்கள் தேர்வு செய்தால் அல்லது உங்கள் தனிப்பட்ட தகவல் நீக்கப்பட வேண்டும் என்று கோரினால், நீங்கள் இனி விசேஷ ஊழிய ஏற்பாட்டில் பங்கேற்க தகுதி பெற மாட்டீர்கள்.
பயிற்சி வகுப்புகள்: கட்டுமான திட்டங்கள் உள்ளிட்ட திட்டங்களில் உதவ நீங்கள் தகுதி பெற்றால், ஒரு பயிற்சி வகுப்பு அமைப்பாளர் உங்களை ஒரு வகுப்பில் கலந்துகொள்ள அழைக்கலாம். நீங்கள் அழைப்பை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம் அல்லது வகுப்பு தொடங்குவதற்கு முன்பு வருகையை ரத்து செய்யலாம். நீங்கள் ஒரு அழைப்பை ஏற்றுக்கொண்டால், வகுப்பின் பயிற்சியாளர்கள் உங்கள் வருகையைப் பதிவு செய்வார்கள், வகுப்பில் கலந்துகொள்வதன் மூலம் நீங்கள் என்ன குறிக்கோள்களை அடைந்தீர்கள் என்பதைத் தீர்மானிப்பார்கள், மேலும் அவர்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம். வகுப்புகளின் ஏற்பாடு செய்பவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் hub.jw.org-ல் உங்கள் என் சுயவிவரப் பக்கத்தில் நீங்கள் சேர்த்த திறன்களை மதிப்பாய்வு செய்து மதிப்பீடு செய்ய முடியும். உங்கள் தகவல்கள் செயலாக்கப்படுவதற்கு, அது யெகோவாவின் சாட்சிகளின் பிற கிளை அலுவலகங்கள், யெகோவாவின் சாட்சிகளின் உலக தலைமையகம் அல்லது பல்வேறு நாடுகளில் உள்ள யெகோவாவின் சாட்சிகளால் பயன்படுத்தப்படும் இதேபோன்ற பிற ஒத்துழைப்பு அமைப்புகளுடனும் பகிரப்படலாம்.
நன்கொடைகள். ஆன்லைனில் நீங்கள் நன்கொடை கொடுத்தால், உங்கள் பெயரையும் உங்களைத் தொடர்புகொள்வதற்கான தகவல்களையும் நாங்கள் பெற்றுக்கொள்வோம். கிரெடிட் கார்ட் மூலமாக நன்கொடைகள் பெறுவதற்கு, பாதுகாப்பு மற்றும் தகவல் தனியுரிமை கொள்கைகளில் உலகத் தரம்வாய்ந்த, அங்கீகாரம் பெற்ற ஆன்லைன் பேமன்ட் சேவைகளைப் பயன்படுத்துகிறோம். நீங்கள் தரும் நன்கொடையைப் பெறுவதற்கு உங்களுடைய கிரெடிட் கார்ட் நம்பர், அக்கவுன்ட் நம்பர் போன்றவற்றைப் பெற்று, அந்த ஆன்லைன் சேவைகளுக்கு அனுப்புவோம். Payment Card Industry Data Security Standard-ன் (“PCI DSS”) விதிமுறைகளுக்கு உட்பட்டு நீங்கள் கொடுக்கும் நன்கொடையைப் பாதுகாப்பாகப் பெற்றுக்கொள்கிறோம். நன்கொடை பெறுபவருக்கு இருக்கும் சட்டப்படியான தேவைகளுக்காகவோ அல்லது வேறு சட்டம் சம்பந்தப்பட்ட காரணங்களுக்காகவோ அந்த நன்கொடை சம்பந்தப்பட்ட பதிவுகளை எவ்வளவு நாளுக்குத் தேவையோ அவ்வளவு நாளுக்கு பாதுகாத்து வைப்பார். நன்கொடை செலுத்தப்பட்ட தேதி, செலுத்தப்பட்ட தொகை, செலுத்தப்பட்ட விதம் ஆகியவற்றை பதிவு செய்து வைப்பார். கணக்குகள் சம்பந்தமான விதிமுறைகளுக்கு இசைவாகச் செயல்பட இந்தப் பதிவுகள் எங்களுக்கு உதவும். அதோடு, உங்களுக்கு ஏதாவது கேள்விகள் எழும்பினால் அதற்கு பதில் கொடுக்கவும் உதவும். கூடுதலாக நன்கொடை அளிக்கும்படி கேட்டு நாங்கள் உங்களை ஒருபோதும் தொடர்புகொள்ள மாட்டோம்.
கூடுதலாகத் தெரிந்துகொள்வதற்கான அல்லது பைபிள் படிப்புக்கான கோரிக்கை. பைபிள் விஷயங்களை நீங்கள் கூடுதலாகத் தெரிந்துகொள்ள விரும்பினால் அல்லது உங்களுக்கு இலவச பைபிள் படிப்பு வேண்டுமென்றால் எங்கள் வெப்சைட் மூலமாகவும் நீங்கள் தொடர்புகொள்ளலாம். நீங்கள் எந்த விஷயத்துக்காக உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை அனுப்புகிறீர்களோ அந்த விஷயத்துக்காக மட்டுமே அவை பயன்படுத்தப்படும். தேவைப்பட்டால் உங்கள் தகவல்கள் மற்ற கிளை அலுவலகங்களுக்கோ யெகோவாவின் சாட்சிகளின் மற்ற அமைப்புகளுக்கோ அனுப்பப்படலாம்.
மற்ற காரணங்கள். ஒரு அக்கவுன்ட்டை ஆரம்பிக்க... ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க... நன்கொடையை அளிக்க... மட்டுமல்லாமல் வேறு சில காரணங்களுக்காகவும் உங்களுடைய பெயர், விலாசம், தொலைப்பேசி எண் போன்ற தனிப்பட்ட விவரங்களை அளிக்க வேண்டியிருக்கலாம். ஒவ்வொரு சூழ்நிலையிலும், எந்தக் காரணத்துக்காக உங்களிடமிருந்து அந்த விவரங்கள் பெறப்படுகிறது என்பது உங்களிடம் தெளிவாகச் சொல்லப்படும். நாங்கள் சொன்ன காரணத்தைத் தவிர வேறு காரணங்களுக்காக நாங்கள் அவற்றைப் பயன்படுத்த மாட்டோம்.
JW லைப்ரரி-ல் தனிப்பட்ட விவரங்களின் பயன்பாடு
JW லைப்ரரி-ல் உங்கள் தனிப்பட்ட விவரங்கள் எப்படிப் பயன்படுத்துகிறது என்பது JW லைப்ரரி உங்கள் விவரங்களை எவ்வாறு பயன்படுத்துகிறது? என்ற பக்கத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பக்கத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி, jw.org வெப்சைட்டிலிருந்து விவரங்களை டவுன்லோட் செய்வதன் மூலம் இந்த ஆப் வேலை செய்கிறது. அந்த டவுன்லோடின்போது பயனரின் ஐபி முகவரியை இந்த வெப்சைட் அணுகும். இந்த வெப்சைட்டால் சேகரிக்கப்பட்ட விவரங்கள், ஆப்பின் சேவைகளை வழங்குவதற்கும், ஆப்பின் சேவைகளை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பான சூழலைப் பராமரிப்பதற்கும் உதவுகிறது. அது குறிப்பாக இதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது: ஆப்பை அணுகவும் இயக்கவும் பயனருக்கு அனுமதி அளிக்கிறது, ஆப்பின் செயல்பாடு மற்றும் மேம்படுத்தலை நிர்வகிக்கிறது, மோசடி மற்றும் தீங்கிழைக்கும் மென்பொருளைத் தடுக்கிறது மற்றும் கண்டறிகிறது மற்றும் பாதுகாப்பு சம்பவங்களை நிர்வகிக்கிறது.
மற்ற நாடுகளுக்குத் தகவல்களை அனுப்புவது
யெகோவாவின் சாட்சிகளுடைய இந்த மத அமைப்பு உலகம் முழுவதுமுள்ள தங்களுடைய உள்ளூர் நிறுவனங்கள் மூலம் இயங்குகிறது. இந்த வெப்சைட் மற்றும் அது தொடர்பான மற்ற ஆப்களுக்கான சில சர்வர்கள் அமெரிக்காவில் இருக்கின்றன. சிலசமயங்களில், உங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் வேறொரு நாட்டுக்கு அனுப்பப்படலாம். அந்த நாட்டில் பின்பற்றப்படும் தகவல் பாதுகாப்பு விதிமுறைகள், உங்களுடைய நாட்டின் விதிமுறைகளிலிருந்து வித்தியாசமாக இருக்கலாம். உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை வேறொரு நாட்டுக்கு அனுப்பும்போது அவற்றைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கிறோம். யெகோவாவின் சாட்சிகளாகிய எங்களுடைய வேலைகளை ஆதரிக்கும் அமைப்புகளும் எங்களால் பயன்படுத்தப்படும் எல்லா அமைப்புகளும் எங்களுடைய தகவல் பாதுகாப்பு கொள்கைகளின்படியும் தனிப்பட்ட விவரங்கள் சம்பந்தப்பட்ட சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படியும் நடக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம்.
இந்த வெப்சைட்டைப் பயன்படுத்துவதன் மூலமும் எலெக்ட்ரானிக் முறையில் எங்களோடு தொடர்புகொள்வதன் மூலமும் உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை இன்னொரு நாட்டுக்கு அனுப்ப நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். பல சந்தர்ப்பங்களில், அப்படிப்பட்ட இடமாற்றங்களுக்கான ஒப்பந்தங்களுக்காக நிலையான ஒப்பந்த விதிகள் போன்றவற்றை நாங்கள் பயன்படுத்துகிறோம்.
உங்கள் உரிமைகள்
தனிப்பட்ட விவரங்களை நாங்கள் பயன்படுத்தும்போதெல்லாம் அவை எந்த நோக்கத்துக்காகப் பெறப்பட்டதோ அதற்கு ஏற்றபடி அவை துல்லியமாகவும் அப்-டு-டேட்டாகவும் இருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்ள நியாயமான படிகளை எடுக்கிறோம். நீங்கள் எங்களுக்கு அளித்த தனிப்பட்ட விவரங்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில், நீங்கள் வாழும் நாட்டைப் பொறுத்தும் அங்கே பின்பற்றப்படுகிற தகவல் பாதுகாப்பு சட்டங்களைப் பொறுத்தும், பின்வரும் உரிமைகள் உங்களுக்கு இருக்கலாம்:
உங்கள் உள்ளூர் சட்டங்களின் அடிப்படையில் உங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் ஏன் கேட்கப்படுகின்றன, அவை எப்படிப் பயன்படுத்தப்படும் என்பதை நீங்கள் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்;
உங்கள் தனிப்பட்ட விவரங்களைப் பார்ப்பதற்கோ, தடுப்பதற்கோ, அழிப்பதற்கோ நீங்கள் அனுமதி கேட்கலாம். ஒருவேளை அவை தவறாகவோ அல்லது அரைகுறையாகவோ இருந்தால் அவற்றைச் சரிசெய்வதற்கும் அனுமதி கேட்கலாம்;
நியாயமான காரணங்களுக்காக, உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை நாங்கள் பயன்படுத்துவதற்கு நீங்கள் மறுப்பு தெரிவிக்கலாம்; அதோடு, இனிமேலும் அவற்றைப் பயன்படுத்த கூடாது என்றும் சொல்லலாம்.
நீங்கள் வாழும் நாட்டில் தகவல் பாதுகாப்பு சட்டங்கள் இருந்தால், அதன் அடிப்படையில் உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை நீங்கள் பார்க்கவோ, திருத்தவோ, அழிக்கவோ விரும்பினால் “தகவல் பாதுகாப்பு தொடர்புகள்” என்ற பக்கத்திலுள்ள விலாசத்தைப் பாருங்கள்.
உங்களுடைய கோரிக்கை, எழுத்து வடிவில் எங்களுக்குக் கிடைத்த பிறகு, அதோடு, உங்கள் அடையாளத்தைப் பற்றி எங்களுக்குப் போதுமான ஆதாரங்களும் தகவல்களும் கிடைத்த பிறகு, அந்தத் தகவல்கள் எல்லாமே உங்களுடையதுதானா என்பதை நாங்கள் அலசி ஆராய்வோம். தகவலைப் பயன்படுத்துபவர்கள் உங்களுடைய கோரிக்கையைப் பரிசீலனை செய்து உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை நீங்கள் பார்ப்பதற்கோ அவற்றைச் சரிசெய்வதற்கோ, அழிப்பதற்கோ அனுமதி வழங்கலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிப்பார்கள். அதோடு, அனுமதி வழங்கப்பட்டால் அது இந்த அமைப்பின் ஏதாவது வேலைக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை யோசித்துப் பார்ப்பார்கள். உதாரணத்துக்கு, அமைப்பின் மத சுதந்திரத்துக்கும் தங்களுடைய வேலைகளைச் செய்வதற்குமான உரிமைக்கு ஆபத்தை ஏற்படுத்துமா என்பதை யோசித்துப் பார்ப்பார்கள். செய்யப்பட்ட மாற்றங்களைப் பற்றி வேறு யாரிடமாவது தெரியப்படுத்த வேண்டியிருந்தால் அவர்ககளிடமும் தெரியப்படுத்துவோம்.
சட்டப்படி உங்கள் தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்த வேண்டியிருந்தால் அல்லது வேறு சட்டப்பூர்வ காரணங்களுக்காக அவற்றைப் பாதுகாக்க வேண்டியிருந்தால் அவை அழிக்கப்படாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். உதாரணத்துக்கு, இந்த மத அமைப்பு யெகோவாவின் சாட்சியான ஒருவரைப் பற்றிய விவரங்களை பாதுகாத்து வைக்க விரும்புகிறது. அப்படிப்பட்ட விவரங்களை அழிப்பது, இந்த மத அமைப்பின் நம்பிக்கைகளுக்கும் வேலைகளுக்கும் எதிரானதாக இருக்கும். யாராவது தங்களுடைய தனிப்பட்ட விவரங்களை அழிக்கும்படி கேட்டுக்கொண்டால், அரசாங்கத்துக்கு அந்த விவரங்களைக் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுமா அல்லது, சட்டப்படி அந்த விவரங்களைப் பாதுகாத்து வைக்க வேண்டிய அவசியம் இருக்கிறதா என்று யோசிப்போம். இந்த வெப்சைட்டின் மூலமாக நீங்கள் அளித்த தகவல்களைப் பயன்படுத்துவது சம்பந்தமாக உள்ளூர் தகவல் பாதுகாப்பு அதிகாரிகளிடம் நீங்கள் புகார் பதிவு செய்ய நினைத்தால் அதையும் செய்யலாம்.