Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

JW லைப்ரரி

பிளேலிஸ்ட்டை பயன்படுத்துங்கள்

பிளேலிஸ்ட்டை பயன்படுத்துங்கள்

தனிப்பட்ட படிப்பு என்ற பட்டனில், வீடியோக்கள், ஆடியோ புரோகிராம்கள் மற்றும் படங்கள் ஆகியவற்றின் பிளேலிஸ்ட்டை நீங்கள் உருவாக்கலாம். உதாரணமாக, நீங்கள் இவற்றை செய்யலாம்:

  • உங்களுக்குப் பிடித்த ராஜ்ய பாடல்களின் ஒரு பிளேலிஸ்ட்டை உருவாக்கலாம்

  • ஊழியத்தில் பயன்படுத்துவதற்கான வீடியோக்களையும் படங்களையும் சேகரிக்கலாம்

  • உங்கள் பேச்சில் நீங்கள் பயன்படுத்த விரும்பும் படங்களை ஒரு பிளேலிஸ்ட்டாக தயாரித்து, அதை ஆடியோ/வீடியோவில் உதவி செய்யும் சகோதரர்களுக்கு அனுப்பலாம்

 ஒரு பிளேலிஸ்ட்டை உருவாக்க மற்றும் அமைக்க

 ஒரு பிளேலிஸ்ட்டை சரிப்படுத்த

 ஒரு பிளேலிஸ்ட்டை வெட்ட

 ஒரு பிளேலிஸ்ட்டை மற்றவர்களுக்கு அனுப்ப

 கீபோர்ட் ஷார்ட்கட்ஸ்

 ஒரு பிளேலிஸ்ட்டை உருவாக்க மற்றும் அமைக்க

ஒரு பிளேலிஸ்ட்டை உருவாக்க

  1. தனிப்பட்ட படிப்பு > பிளேலிஸ்ட்-ஐ கிளிக் செய்யவும்

  2. பிளேலிஸ்ட்டை சேர்க்கவும் என்ற பட்டனை கிளிக் செய்யவும்

  3. பிளேலிஸ்ட்டை உருவாக்கவும் அல்லது பிளேலிஸ்ட்களை இறக்குமதி செய்யவும் என்பதை கிளிக் செய்யவும்

    • பிளேலிஸ்ட்டை உருவாக்கவும்: பிளேலிஸ்ட்டுக்கான பெயரை டைப் செய்துவிட்டு உருவாக்கவும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்

    • பிளேலிஸ்டுகளை இறக்குமதி செய்யவும்: ஏற்கெனவே உள்ள பிளேலிஸ்ட்டைக் கண்டுபிடித்து இறக்குமதி செய்ய உங்கள் எலெக்ட்ரானிக் சாதனத்தில் ஃபைல் பிரவுசரை பயன்படுத்தவும்

ஒரு பிளேலிஸ்ட்டில் ஃபைல்களை சேர்க்க

அப்ளிகேஷனில் உள்ள வீடியோக்கள், இசை மற்றும் பிற ஆடியோ நிகழ்ச்சிகள்

  1. ஒரு குறிப்பிட்ட ஃபைலில் மேலும் பட்டனை கிளிக் செய்யவும்

  2. பிளேலிஸ்ட்டில் சேர்க்கவும் என்பதை கிளிக் செய்யவும்

  3. ஏற்கெனவே உள்ள ஒரு பிளேலிஸ்ட்டை தேர்ந்தெடுக்கவும் அல்லது ஒரு புதிய பிளேலிஸ்ட்டில் அதை சேர்க்க, பிளேலிஸ்ட்டை உருவாக்கவும் என்பதை கிளிக் செய்யவும்

அப்ளிகேஷனில் உள்ள படங்கள்

  1. படத்தை தேர்ந்தெடுக்கவும்

  2. பிளேலிஸ்ட்டில் சேர்க்கவும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்

  3. ஏற்கெனவே உள்ள ஒரு பிளேலிஸ்ட்டை தேர்ந்தெடுக்கவும் அல்லது ஒரு புதிய பிளேலிஸ்ட்டில் அதை சேர்க்க, பிளேலிஸ்ட்டை உருவாக்கவும் என்பதை கிளிக் செய்யவும்

மற்ற இடங்களிலிருந்து

அப்ளிகேஷனில் இல்லாத ஒரு வீடியோவையோ ஆடியோவையோ அல்லது படத்தையோ நீங்கள் பிளேலிஸ்ட்டில் சேர்க்கலாம்.

  1. பிளேலிஸ்ட்டுகள் பக்கத்துக்கு செல்லவும்

  2. ஏற்கெனவே உள்ள ஒரு பிளேலிஸ்ட்டை திறக்கவும்

  3. ஃபைலை இறக்குமதி செய்யவும் என்பதை கிளிக் செய்யவும்

  4. ஃபைலை கண்டுபிடித்து இறக்குமதி செய்ய உங்கள் எலெக்ட்ரானிக் சாதனத்தில் ஃபைல் பிரவுசரை பயன்படுத்தவும்

 ஒரு பிளேலிஸ்ட்டை சரிப்படுத்த

மறுபெயரிடு

ஒரு பிளேலிஸ்ட்டை மறுபெயரிட:

  • நீங்கள் பிளேலிஸ்ட்டுகள் பக்கத்தில் இருந்தால், ஒரு குறிப்பிட்ட பிளேலிஸ்ட்டில் மேலும் பட்டனை கிளிக் செய்யவும், பின்பு மறுபெயரிடு என்பதை தேர்ந்தெடுத்து புதிய பெயரை டைப் செய்யவும்

  • நீங்கள் ஒரு பிளேலிஸ்ட்டுக்குள் இருந்தால், மறுபெயரிடு பட்டனை கிளிக் செய்து புதிய பெயரை டைப் செய்யவும்

பிளேலிஸ்ட்டில் உள்ள ஒரு ஃபைலை மறுபெயரிட:

  1. அந்த ஃபைலில் உள்ள மேலும் பட்டனை கிளிக் செய்யவும்

  2. மறுபெயரிடு என்பதை தேர்ந்தெடுத்து புதிய பெயரை டைப் செய்யவும்

ஒரு பிளேலிஸ்ட்டில் உள்ள ­­ஃபைல்களின் வரிசையை மாற்ற

  • வரிசையை மாற்றுவதற்கு, பிளேலிஸ்ட்டில் உள்ள ஒரு ஃபைலை அழுத்திப் பிடித்து விருப்பப்பட்ட இடத்துக்கு நகர்த்தி வைக்கவும்

தொடங்கியவுடன் செய்ய வேண்டியதை மாற்ற

ஒரு பிளேலிஸ்ட்டை தொடங்கும்போது தானாகவே இயங்க ஆரம்பிக்கும். செட்டிங்கில் இருக்கும் தொடங்கியவுடன் செய்ய வேண்டியவை ஆப்ஷனை உங்களால் மாற்றிக்கொள்ள முடியும். இயக்கவும் மற்றும் நிற்கவும் என்ற ஆப்ஷன்கள் அதில் இருக்கும்.

முடிவு செட்டிங்கை மாற்ற

ஒரு பிளேலிஸ்ட் ஃபைல் முடியும்போது உங்களால் செய்ய முடிந்த மாற்றங்கள்:

  1. முடிவு செட்டிங் பட்டனை கிளிக் செய்யவும்

  2. முடிவு செட்டிங்கில் உள்ள மற்ற ஆப்ஷன்களை தெரிவு செய்யுங்கள்

தொடரவும் என்பதுதான் தானாகவே இருக்கும் முடிவு செட்டிங். செட்டிங்கில் இருக்கிற டீஃபால்ட் முடிவு செட்டிங்கை உங்களால் மாற்ற முடியும்.

முடிவு செட்டிங்கில்

நடப்பவை

தொடரவும்

பிளேலிஸ்ட்டில் இருக்கும் அடுத்த ஃபைலுக்கு மாற்ற

நிறுத்து

பிளேலிஸ்ட்டில் உள்ள ஃபைல்களுக்கு திரும்பவும் செல்ல

இடைநிறுத்து

அடுத்த ஃபைலுக்கு போகாமல் அப்படியே அந்த ஃபைலின் முடிவில் நிற்கும்

திரும்ப இயக்கவும்

அதே ஃபைல் மறுபடியும் ஆரம்பத்திலிருந்து இயங்கும்

 ஒரு பிளேலிஸ்ட்டை வெட்ட

ஒரு பெரிய வீடியோ அல்லது ஆடியோ ஃபைலில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் இயக்க வெட்டு என்ற ஆப்ஷன் உதவும்.

  1. குறிப்பிட்ட பிளேலிஸ்ட்டில் இருக்கும் மேலும் பட்டனை கிளிக் செய்யுங்கள், அதில் வெட்டு என்ற ஆப்ஷனை தெரிவு செய்யுங்கள்.

    அல்லது, ஒரு ஃபைலை நீங்கள் இயக்கி கொண்டிருந்தால், செட்டிங் பட்டனை கிளிக் செய்யுங்கள், அதில் வெட்டு என்ற ஆப்ஷனை தெரிவு செய்யுங்கள்

  2. தொடக்க மற்றும் இறுதி புள்ளிகளை செட் செய்ய காலவரிசையில் உள்ள கைப்பிடிகளைப் பயன்படுத்துங்கள்

    மிகவும் துல்லியமான தொடக்க அல்லது இறுதி புள்ளிக்கு, தொடக்க அல்லது இறுதி புள்ளிக்கான கைப்பிடியை அழுத்திப் பிடியுங்கள்

  3. வெட்டப்பட்ட ஃபைலை முன்னோட்டமிட இயக்கு பட்டனை பயன்படுத்துங்கள்.

 ஒரு பிளேலிஸ்ட்டை மற்றவர்களுக்கு அனுப்ப

அனுப்பு அம்சத்தைப் பயன்படுத்தி பிளேலிஸ்ட்டை மற்றவர்களுக்கு அனுப்பலாம்.

  • பிளேலிஸ்ட் பக்கத்தில் நீங்கள் இருந்தால், குறிப்பிட்ட பிளேலிஸ்ட்டில் இருக்கும் மேலும் பட்டனை கிளிக் செய்யவும், பின்பு அனுப்பு பட்டனை கிளிக் செய்து அனுப்பு ஆப்ஷனை தெரிவு செய்யுங்கள்

  • பிளேலிஸ்ட்டில் நீங்கள் இருந்தால் அனுப்பு பட்டனை கிளிக் செய்து அனுப்பு ஆப்ஷனை தெரிவு செய்யுங்கள்

 கீபோர்டு ஷார்ட்கட்

ஒரு பிளேலிஸ்ட் ஃபைலில் இருந்து மற்றொரு பிளேலிஸ்ட் ஃபைலுக்கு போக கீபோர்டு ஷார்ட்கட் உதவும்.

வின்டோஸ் (Windows)

மேக் ஓ.எஸ் (macOS)

முந்தின பிளேலிஸ்ட் ஃபைல்

பேஜ் அப்

பங்ஷன்-மேல் அம்பு

அடுத்த பிளேலிஸ்ட் ஃபைல்

பேஜ் டவுன்

பங்ஷன்-கீழ் அம்பு