ஏசாயா 33:1-24

  • தண்டனைத் தீர்ப்பும் நீதிமான்களுக்கு நம்பிக்கையும் (1-24)

    • யெகோவா நம் நீதிபதி, நமக்குச் சட்டம் கொடுப்பவர், நம் ராஜா (22)

    • “எனக்கு உடம்பு சரியில்லை” என்று யாருமே சொல்ல மாட்டார்கள் (24)

33  அழிப்பவனே, உனக்கு இன்னும் அழிவு வரவில்லை.+துரோகியே, உனக்கு இன்னும் துரோகம் செய்யப்படவில்லை. ஆனால், உனக்கு ஐயோ கேடு! நீ அழித்து முடித்தபின் அழிந்துபோவாய்;+ துரோகம் செய்து முடித்தபின் துரோகம் செய்யப்படுவாய்.   யெகோவாவே, எங்களுக்குக் கருணை காட்டுங்கள்.+ நாங்கள் உங்களையே நம்பியிருக்கிறோம். ஒவ்வொரு நாள் காலையிலும் எங்களுக்குப் பக்கபலமாக இருங்கள்.+கஷ்ட காலத்தில் எங்களைக் காப்பாற்றுங்கள்.+   உங்களுடைய கர்ஜனையைக் கேட்டு ஜனங்கள் ஓடிப்போவார்கள். நீங்கள் எழும்போது தேசங்கள் சிதறிப்போகும்.+   வெட்டுக்கிளி கூட்டத்தைப் போல மக்கள் கூட்டம் கைப்பற்றப்பட்ட பொருள்கள்மேல் பாயும்.அகோரப் பசியுள்ள வெட்டுக்கிளிகள் எதையும் விட்டுவைக்காதது போல ஜனங்கள் அவற்றில் எதையும் விட்டுவைக்க மாட்டார்கள்.   யெகோவா மகிமை அடைவார்.ஏனென்றால், அவர் உயர்ந்த இடத்தில் இருக்கிறார். அவர் சீயோனில் நியாயமும் நீதியும் தங்கும்படி செய்வார்.   அவர்தான் காலங்களை* நிலைப்படுத்துகிறார்.அவர் மாபெரும் விதத்தில் மீட்பையும்,+ ஞானத்தையும், அறிவையும், யெகோவாவுக்குப் பயப்படும் பயத்தையும்+ தருகிறார்.இதுதான் அவருடைய பொக்கிஷம்.   இதோ, அவர்களுடைய* வீரர்கள் வீதியில் அலறுகிறார்கள்.சமாதானத் தூதுவர்கள் தேம்பி அழுகிறார்கள்.   நெடுஞ்சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.வீதிகளில் யாரும் பயணம் செய்வதில்லை. அவன்* ஒப்பந்தத்தை மீறினான்.நகரங்கள்மேல் வெறுப்பைக் காட்டினான்.மனிதனை அவன் கொஞ்சமும் மதிப்பது இல்லை.+   தேசம் துக்கப்படுகிறது,* சோகத்தில் வாடுகிறது. லீபனோன் அவமானப்பட்டு+ அழிந்துபோகிறது. சாரோன் பாலைவனம்போல் மாறிவிட்டது. பாசானிலும் கர்மேலிலும் இலைகள் உதிர்ந்துவிட்டன.+ 10  யெகோவா இப்படிச் சொல்கிறார்: “இப்போது நான் எழுந்து,என்னை மேன்மைப்படுத்துவேன்.+என்னை மகிமைப்படுத்துவேன். 11  நீங்கள் காய்ந்த புல்லைக் கருத்தரித்து வைக்கோலைப் பெற்றெடுக்கிறீர்கள். உங்களுடைய புத்தியே உங்களைத் தீ போல எரித்து நாசமாக்கிவிடும்.+ 12  வெட்டப்பட்ட முட்செடிகளைப் போல் ஜனங்கள் கொளுத்தப்படுவார்கள். அவர்கள் எரிக்கப்பட்டு சுண்ணாம்பைப் போல் ஆவார்கள்.+ 13  தூரத்தில் இருக்கிறவர்களே, நான் செய்யப்போவதைக் கேளுங்கள்! பக்கத்தில் இருக்கிறவர்களே, என் பலத்தைப் புரிந்துகொள்ளுங்கள்! 14  சீயோனில் இருக்கிற பாவிகள் அரண்டுபோயிருக்கிறார்கள்.+கடவுளைவிட்டு விலகியவர்கள்* நடுநடுங்குகிறார்கள். ‘சுட்டெரிக்கும் நெருப்புக்குப் பக்கத்தில் யாராவது வாழ முடியுமா?+ அணையாத தீயின் பக்கத்தில் யாராவது குடியிருக்க முடியுமா?’ என்று சொல்கிறார்கள். 15  எப்போதுமே நீதியாய் நடக்கிறவனும்,+உண்மையைப்+ பேசுகிறவனும்,அநியாயமாக லாபம் சம்பாதிக்காதவனும்,கை நீட்டி லஞ்சம் வாங்காதவனும்,+கொலை செய்வதற்கான ஆலோசனைகளைக் கேட்காமல் காதுகளை அடைத்துக்கொள்கிறவனும்,கெட்டதைப் பார்க்காமல் கண்களை மூடிக்கொள்கிறவனும், 16  உயர்ந்த இடங்களில் பாதுகாப்பாக வாழ்வான்.கற்பாறைக் கோட்டைகளில் பத்திரமாகக் குடியிருப்பான்.அவனுக்கு எப்போதும் உணவு கிடைக்கும்.தண்ணீருக்குப் பஞ்சமே இருக்காது.”+ 17  மகிமையான ராஜாவை உன் கண்கள் பார்க்கும்.தூரத்தில் இருக்கிற தேசத்தையும் பார்க்கும். 18  நீ பயந்து நடுங்கிக்கொண்டிருந்த காலத்தைப் பற்றி நினைத்துப் பார்த்து, “அந்தக் கணக்கன்* எங்கே? கப்பம் கட்டுகிறவன்+ எங்கே? கோபுரங்களைக் கணக்கிடுகிறவன் எங்கே?” என்று சொல்வாய். 19  அந்தக் கொடூரமான ஜனங்களை,உனக்குப் புரியவே புரியாத வேறொரு பாஷையைப் பேசுகிற அந்த ஜனங்களை+இனி நீ பார்க்கவே மாட்டாய். 20  நம்முடைய பண்டிகைகள் கொண்டாடப்படும் நகரமான சீயோனைப் பார்!+ உன் கண்கள் எருசலேமை அமைதியான இடமாகவும்நிரந்தரமான கூடாரமாகவும்+ பார்க்கும். அதன் ஆணிகள் ஒருபோதும் பிடுங்கப்படாது.அதன் கயிறுகள் எதுவும் அறுந்துபோகாது. 21  மகத்தான கடவுளாகிய யெகோவா ஆறுகளைப் போலவும்,அகலமான கால்வாய்களைப் போலவும் நம்மைச் சூழ்ந்து பாதுகாப்பார்.துடுப்புக் கப்பல்களோ, பிரமாண்டமான வேறு கப்பல்களோநமக்கு எதிராக வருவதற்கு அவர் விட மாட்டார். 22  யெகோவா நம்முடைய நீதிபதி.+யெகோவா நமக்குச் சட்டம் கொடுப்பவர்.+யெகோவா நம் ராஜா.+அவரே நம்மைக் காப்பாற்றுவார்.+ 23  எதிரிகளுடைய கப்பல்களின் கயிறுகள் தளர்ந்துபோகும்.பாய்மரத்தை இழுத்துப் பிடிக்கவோ கப்பற்பாயை விரிக்கவோ முடியாமல்போகும். அப்போது, கைப்பற்றப்பட்ட பொருள்கள் எல்லாருக்கும் ஏராளமாகக் கிடைக்கும்.கால் ஊனமானவர்கள்கூட அவற்றை அள்ளிக்கொண்டு போவார்கள்.+ 24  “எனக்கு உடம்பு சரியில்லை” என்று யாருமே சொல்ல மாட்டார்கள்.+ தேசத்து ஜனங்களுடைய குற்றங்கள் மன்னிக்கப்பட்டிருக்கும்.+

அடிக்குறிப்புகள்

நே.மொ., “உன் காலங்களை.”
அநேகமாக, “யூதாவுடைய.”
அதாவது, “எதிரி.”
அல்லது, “நிலம் வறண்டுபோகிறது.”
வே.வா., “விசுவாசதுரோகிகள்.”
வே.வா., “எழுத்தன்.”