பைபிளில் இருக்கும் புதையல்கள்
“உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களிடம் என்ன கேட்கிறார்?”
அன்பினாலும் ஆழ்ந்த மரியாதையினாலும் யெகோவாவுக்குக் கீழ்ப்படியுங்கள் (உபா 10:12; w10 7/1 பக். 16 பாரா. 3-4)
கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதங்கள் கிடைக்கும் (உபா 10:13; w10 7/1 பக். 16 பாரா 6)
தன்னிடம் நெருங்கிவர வேண்டும் என்று யெகோவா நம்மிடம் எதிர்பார்க்கிறார் (உபா 10:15; cl பக். 16 பாரா 2)
தனக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று யெகோவா நம்மை வற்புறுத்துவது கிடையாது. அதற்குப் பதிலாக, அன்பினால் தூண்டப்பட்டு ‘மனப்பூர்வமாகக் கீழ்ப்படிய’ வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார். (ரோ 6:17) யெகோவாவை வணங்க முடிவு செய்கிறவர்கள் மிகச் சிறந்த வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.