பாட்டு 154; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“ஆன்மீக ரீதியில் விழிப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள்”: (10 நிமி.)
[நாகூம் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]
[ஆபகூக் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]
ஆப 2:1-4—வரப்போகும் யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நாளில் தப்பிக்க வேண்டுமென்றால், நாம் ‘அதற்காகக் காத்திருக்க’ வேண்டும் (w07 11/15 பக். 10 பாரா. 3-5)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
நாகூ 1:8; 2:6—நினிவே எப்படி அழிக்கப்பட்டது? (w07 11/15 பக். 9 பாரா 2)
ஆப 3:17-19—அர்மகெதோனின்போதும் அதற்கு முன்பும் நமக்கு நெருக்கடிகள் வரலாம் என்றாலும், நாம் என்ன நம்பிக்கையோடு இருக்கலாம்? (w07 11/15 பக். 10 பாரா 10)
நாகூம் 1 முதல் ஆபகூக் 3 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) ஆப 2:15–3:6
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) hf—மறுசந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள்.
மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) hf—முந்தின சந்திப்பில் இந்தச் சிற்றேட்டைப் பெற்றுக்கொண்டவரை மறுசந்திப்பு செய்யுங்கள்.
பேச்சு: (6 நிமிடத்திற்குள்) w16.03 பக். 23-25—பொருள்: உங்கள் சபைக்கு உதவ முடியுமா?
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 40
“உங்கள் சூழ்நிலைகள் மாறும்போது ஆன்மீக ரீதியில் விழிப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். இடம் மாறி சென்றாலும் யெகோவாவுக்கே முதலிடம் என்ற வீடியோவைக் காட்டுங்கள். (வீடியோக்கள் > பைபிள் என்ற தலைப்பில் பாருங்கள்).
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv அதி. 10 பாரா. 16-24
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.) டிசம்பர் மாதம், “உலகம் கட்டுக்கடங்காமல் போகிறதா?” என்ற அட்டைப்படக் கட்டுரையைக் கொண்ட விழித்தெழு! பத்திரிகையை ஊழியத்தில் கொடுப்போம் என்பதை சபைக்குத் தெரியப்படுத்துங்கள். அந்தப் பத்திரிகையை எப்படிக் கொடுக்கலாம் என்பதைப் பற்றிய வீடியோ நவம்பர் 30-ம் தேதிமுதல் JW லைப்ரரியில் கிடைக்கும்; அடுத்த வார கூட்டத்திலும் அது காட்டப்படும். இந்த பத்திரிகையின் எலக்ட்ரானிக் பிரதிகளை முடிந்தவரை எல்லாருக்கும் கொடுக்க பிரஸ்தாபிகள் முயற்சி செய்ய வேண்டும்.
பாட்டு 75; ஜெபம்