கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
எளிமையாக வாழுங்கள், சந்தோஷமாக சேவை செய்யுங்கள்!
இந்த உலகத்தில் இருக்கும் நிறைய விஷயங்கள் நம் வாழ்க்கையை சிக்கலாக்கிவிடும். பொருள்களை வாங்க, அதற்காக பணத்தை சம்பாதிக்க, அதை பயன்படுத்த, பராமரிக்க, பாதுகாக்க நிறைய நேரமும் சக்தியும் தேவைப்படுகிறது. இயேசு, எளிமையான வாழ்க்கை வாழ்ந்ததால், தேவையில்லாத விஷயங்களில் நேரத்தை வீணாக்காமல் ஊழியத்திற்கு அதிக கவனம் செலுத்தினார்.—மத் 8:20.
ஊழியத்தை இன்னும் அதிகமாக செய்ய, உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை செய்யலாம் என்று யோசித்துப் பாருங்கள். குடும்பமாக சில மாற்றங்களை செய்து, யாராவது ஒருவர் பயனியராக ஆக முடியுமா? இப்போது நீங்கள் முழுநேர சேவையில் இருந்தாலும் இப்படி யோசித்துப் பாருங்கள்: பொருள் சேர்ப்பது போன்ற தேவையில்லாத விஷயங்கள் மெல்ல மெல்ல என் வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொண்டிருக்கிறதா? எளிமையான வாழ்க்கை வாழ்ந்தால் யெகோவாவுக்கு சந்தோஷமாக சேவை செய்யலாம், திருப்தியாகவும் வாழலாம்.—1தீ 6:7-9.
என் வாழ்க்கையை எளிமையாக்க . . .