Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • இயேசு மூலம் கடவுளிடமிருந்து கிடைத்த வெளிப்படுத்துதல் (1-3)

    • ஏழு சபைகளுக்கும் வாழ்த்துக்கள் (4-8)

      • “ஆல்பாவும் ஒமேகாவும் நானே” (8)

    • கடவுளுடைய சக்தியால் எஜமானுடைய நாளுக்கு யோவான் கொண்டுவரப்படுகிறார் (9-11)

    • மகிமைப்படுத்தப்பட்ட இயேசுவின் தரிசனம் (12-20)

  • 2

    • எபேசு (1-7), சிமிர்னா (8-11), பெர்கமு (12-17), தியத்தீராவுக்குச் செய்தி (18-29)

  • 3

    • சர்தை (1-6), பிலதெல்பியா (7-13), லவோதிக்கேயாவுக்குச் செய்தி (14-22)

  • 4

    • யெகோவாவுடைய பரலோகப் பிரசன்னத்தின் காட்சி (1-11)

      • யெகோவா சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிறார் (2)

      • 24 மூப்பர்கள் சிம்மாசனங்களில் உட்கார்ந்திருக்கிறார்கள் (4)

      • நான்கு ஜீவன்கள் (6)

  • 5

    • ஏழு முத்திரைகளைக் கொண்ட சுருள் (1-5)

    • சுருளை ஆட்டுக்குட்டியானவர் வாங்குகிறார் (6-8)

    • சுருளை விரிக்க ஆட்டுக்குட்டியானவர் தகுதியுள்ளவர் (9-14)

  • 6

    • முதல் ஆறு முத்திரைகளை ஆட்டுக்குட்டியானவர் உடைக்கிறார் (1-17)

      • வெள்ளைக் குதிரையில் ஜெயிக்கிறவராகப் போகிறார் (1, 2)

      • சிவப்புக் குதிரையில் போகிறவன் சமாதானத்தை எடுத்துப் போடுவான் (3, 4)

      • கறுப்புக் குதிரையில் போகிறவன் பஞ்சத்தைக் கொண்டுவருவான் (5, 6)

      • மங்கிய நிறமுள்ள குதிரையில் போகிறவனின் பெயர் மரணம் (7, 8)

      • கொல்லப்பட்டவர்களின் இரத்தம் பலிபீடத்தின் கீழே இருக்கிறது (9-11)

      • பயங்கர நிலநடுக்கம் (12-17)

  • 7

    • நாசப்படுத்தும் காற்றுகளை நான்கு தேவதூதர்கள் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள் (1-3)

    • 1,44,000 பேர் முத்திரை போடப்படுகிறார்கள் (4-8)

    • வெள்ளை உடையில் திரள் கூட்டம் (9-17)

  • 8

    • ஏழாம் முத்திரை உடைக்கப்படுகிறது (1-6)

    • முதல் நான்கு எக்காளங்கள் ஊதப்படுகின்றன (7-12)

    • மூன்று கேடுகள் அறிவிக்கப்படுகின்றன (13)

  • 9

    • ஐந்தாம் எக்காளம் (1-11)

    • முதலாவது கேடு போய்விட்டது, இரண்டு கேடுகள் வரப்போகின்றன (12)

    • ஆறாவது எக்காளம் (13-21)

  • 10

    • சிறிய சுருளை வைத்திருக்கிற பலமுள்ள தேவதூதர் (1-7)

      • “இனியும் தாமதமாகாது” (6)

      • பரிசுத்த ரகசியம் நிறைவேற்றப்படும் (7)

    • சிறிய சுருளை யோவான் சாப்பிடுகிறார் (8-11)

  • 11

    • இரண்டு சாட்சிகள் (1-13)

      • துக்கத் துணியைப் போட்டுக்கொண்டு 1,260 நாட்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள் (3)

      • கொல்லப்படுகிறார்கள், அடக்கம் செய்யப்படுவதில்லை (7-10)

      • மூன்றரை நாட்களுக்குப் பிறகு உயிர் பெறுகிறார்கள் (11, 12)

    • இரண்டாவது கேடு போய்விட்டது, மூன்றாவது வரப்போகிறது (14)

    • ஏழாம் எக்காளம் (15-19)

      • நம் எஜமானுக்கும் அவருடைய கிறிஸ்துவுக்கும் சொந்தமான அரசாங்கம் (15)

      • பூமியை நாசமாக்குகிறவர்கள் நாசமாக்கப்படுவார்கள் (18)

  • 12

    • பெண், ஆண் குழந்தை, ராட்சதப் பாம்பு (1-6)

    • மிகாவேலுக்கும் ராட்சதப் பாம்புக்கும் போர் (7-12)

      • ராட்சதப் பாம்பு பூமிக்குத் தள்ளப்படுகிறது (9)

      • கொஞ்சக் காலம்தான் இருக்கிறது என்று பிசாசுக்குத் தெரியும் (12)

    • ராட்சதப் பாம்பு பெண்ணைக் கொடுமைப்படுத்துகிறது (13-17)

  • 13

    • ஏழு தலைகளை உடைய மூர்க்க மிருகம் கடலிலிருந்து ஏறி வருகிறது (1-10)

    • இரண்டு கொம்புகளைக் கொண்ட மூர்க்க மிருகம் பூமியிலிருந்து வருகிறது (11-13)

    • ஏழு தலைகளை உடைய மூர்க்க மிருகத்தின் உருவம் (14, 15)

    • மூர்க்க மிருகத்தின் அடையாளக் குறியும் எண்ணும் (16-18)

  • 14

    • ஆட்டுக்குட்டியானவரும் 1,44,000 பேரும் (1-5)

    • மூன்று தேவதூதர்கள் சொன்ன செய்தி (6-12)

      • நடுவானத்தில் பறக்கிற தேவதூதர் நல்ல செய்தியை அறிவிக்கிறார் (6, 7)

    • எஜமானுடைய சீஷர்களாக இறந்துபோகிறவர்கள் சந்தோஷமானவர்கள் (13)

    • பூமியின் இரண்டு அறுவடைகள் (14-20)

  • 15

    • ஏழு தண்டனைகளோடு ஏழு தேவதூதர்கள் (1-8)

      • மோசேயின் பாட்டும் ஆட்டுக்குட்டியானவரின் பாட்டும் (3, 4)

  • 16

    • கடவுளுடைய ஏழு கோபக் கிண்ணங்கள் (1-21)

      • பூமி (2), கடல் (3), ஆறுகள், நீரூற்றுகள் (4-7), சூரியன் (8, 9), மூர்க்க மிருகத்தின் சிம்மாசனம் (10, 11), யூப்ரடிஸ் (12-16), காற்று (17-21) ஆகியவற்றின்மீது ஊற்றப்படுகின்றன

      • அர்மகெதோனில் கடவுளுடைய போர் (14, 16)

  • 17

    • ‘மகா பாபிலோனுக்கு’ நியாயத்தீர்ப்பு (1-18)

      • கருஞ்சிவப்பு நிறமுள்ள மூர்க்க மிருகத்தின் மேல் பேர்போன விபச்சாரி உட்கார்ந்திருக்கிறாள் (1-3)

      • மூர்க்க மிருகம் ‘முன்பு இருந்தது, இப்போது இல்லை, ஆனால் மறுபடியும் அதலபாதாளத்திலிருந்து வரப்போகிறது’ (8)

      • பத்துக் கொம்புகள் ஆட்டுக்குட்டியானவரோடு போர் செய்யும் (12-14)

      • பத்துக் கொம்புகள் விபச்சாரியை வெறுக்கின்றன (16, 17)

  • 18

    • “மகா பாபிலோன்” விழுந்துவிட்டாள் (1-8)

      • “என் மக்களே, அவளைவிட்டு வெளியே வாருங்கள்” (4)

    • பாபிலோனுடைய வீழ்ச்சியைப் பார்த்து புலம்பல் (9-19)

    • பாபிலோனுடைய வீழ்ச்சியால் பரலோகத்தில் சந்தோஷம் (20)

    • ஒரு கல்லைப் போல் பாபிலோன் கடலுக்குள் வீசப்படும் (21-24)

  • 19

    • ‘யா’ கடவுளின் தீர்ப்புகளுக்காக அவரைப் புகழுங்கள் (1-10)

      • ஆட்டுக்குட்டியானவரின் திருமணம் (7-9)

    • வெள்ளைக் குதிரையில் உட்கார்ந்திருப்பவர் (11-16)

    • கடவுள் கொடுக்கிற மாபெரும் விருந்து (17, 18)

    • மூர்க்க மிருகம் தோற்கடிக்கப்படுகிறது (19-21)

  • 20

    • சாத்தான் 1,000 வருஷங்களுக்குக் கட்டிப்போடப்படுகிறான் (1-3)

    • கிறிஸ்துவோடு 1,000 வருஷங்கள் ஆட்சி செய்கிறவர்கள் (4-6)

    • சாத்தான் விடுதலை செய்யப்படுகிறான், பின்பு அழிக்கப்படுகிறான் (7-10)

    • இறந்தவர்களுக்கு வெள்ளைச் சிம்மாசனம் முன்னால் தீர்ப்பு கிடைக்கிறது (11-15)

  • 21

    • புதிய வானமும் புதிய பூமியும் (1-8)

      • இனிமேல் மரணம் இருக்காது (4)

      • எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன் (5)

    • புதிய எருசலேமைப் பற்றிய விவரிப்பு (9-27)

  • 22

    • வாழ்வு தரும் தண்ணீர் நிறைந்த ஆறு (1-5)

    • முடிவுரை (6-21)

      • ‘வருக! வருக! வாழ்வு தரும் தண்ணீரை இலவசமாக வாங்கிக்கொள்ளுங்கள்’ (17)

      • “எஜமானாகிய இயேசுவே, வாருங்கள்” (20)