“முழுக்க முழுக்க அர்த்தம் நிறைந்தவை”
“முழுக்க முழுக்க அர்த்தம் நிறைந்தவை”
யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்களில் வெளிவரும் படங்களைப் பற்றித்தான் இப்படி சொல்லப்பட்டது. எங்கே தெரியுமா? ஜெர்மனியிலுள்ள காசெலில் நடைபெற்ற சர்வதேச கலைக் கண்காட்சியில். 16 வயது காட்யாவும் அவளது சகமாணவர்களும் அந்தக் கண்காட்சிக்கு சென்றிருந்தார்கள்; மத சம்பந்தமான சில கலைப் படைப்புகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது என்ன நடந்தது என்பதை காட்யா விவரிக்கிறாள்:
“யெகோவாவின் சாட்சிகளுடைய பத்திரிகைகளை எப்போதாவது பார்த்ததுண்டா என்று எங்கள் கைடு எல்லா மாணவர்களிடமும் கேட்டார். பார்த்ததில்லை என எல்லாருமே சொன்னார்கள். அப்போது அவர் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளில் வரும் படங்களைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசினார். படங்கள் வெகு அருமையாக வரையப்பட்டிருப்பதையும் போட்டோக்கள் மிகப் பொருத்தமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதையும் சொன்னார்; அதோடு, அவை ‘முழுக்க முழுக்க அர்த்தம் நிறைந்தவை’ என்றும் குறிப்பிட்டார்.
“இந்த ஆர்வத்திற்குரிய படங்களை நன்றாக ஆராய்ந்து பார்த்து ரசிக்கும்படி அவர் எங்களிடம் சொன்னார்.” பைபிள் சம்பவங்களின் நவீனகால படங்களை பார்த்தால், நம் காலத்தில் அவை எப்படி பொருந்துகின்றன என்பதை சுலபமாக புரிந்துகொள்ளலாம் என்றும் விளக்கினார். பிறகு, அந்தப் பத்திரிகைகள் கொடுக்கப்படும்போது அவற்றை மறுக்காமல் வாங்கிக் கொள்ளுமாறு உற்சாகப்படுத்தி, படங்களைப் பார்ப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவற்றிலுள்ள தகவல் நிறைந்த ஆர்வத்திற்குரிய கட்டுரைகளை வாசிக்கும்படியும் கேட்டுக்கொண்டார். (g04 4/22)